கோவில் 1911 - விழுப்புரம் வழுதரெட்டி முருகன் கோவில்
🙏🏼🙏🏼
தினம் ஒரு முருகன் ஆலயம்-1911
மங்கல வாழ்வு அருளும் விழுப்புரம் வழுதரெட்டி முருகன் கோவில்
1.09.2026 செவ்வாய்
அருள்மிகு முருகன் திருக்கோவில்
வழுதரெட்டி 605403
விழுப்புரம் வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
இருப்பிடம்: விழுப்புரம் 2 கிமீ, விக்கிரவாண்டி 14 கிமீ, திருவெண்ணெய்நல்லூர் 18 கிமீ, பண்ருட்டி 27 கிமீ, திண்டிவனம் 38 கிமீ, திருக்கோவிலூர் 40 கிமீ
மூலவர்: முருகன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் வட்டம் விழுப்புரம் மாநகரம் அருகில் வழுதரெட்டி கிராமத்தில் மங்கல வாழ்வு அருளும் விழுப்புரம் வழுதரெட்டி முருகன் கோவில் அமைந்துள்ளது.
விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவு அல்லது விக்கிரவாண்டி பேருந்து நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவு அல்லது 30 கிமீ திருவெண்ணெய்நல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவு அல்லது பண்ருட்டி பேருந்து நிலையத்திலிருந்து 27 கிமீ தொலைவு அல்லது திண்டிவனம் பேருந்து நிலையத்திலிருந்து 38 கிமீ தொலைவு அல்லது திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 40 கிமீ தொலைவு பிரயாணம் செய்தால் விழுப்புரம் வழுதரெட்டி முருகன் திருக்கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் வள்ளி, தெய்வானை சமேத முருகன் கையில் வேலேந்தி அருளாட்சி புரிகின்றார்.
விழுப்புரம் வழுதரெட்டி முருகன் கோவிலில் தைப்பூசம் வருடந்தோறும் முக்கியத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது. பங்குனி உத்திரத் திருவிழா சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்துத் திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை போன்ற திருநாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
விழுப்புரம் மாநகர் அருகில் வழுதரெட்டி முருகன் கோவில் இப்பகுதியில் பிரசித்திப் பெற்ற திருக்கோவில் ஆகும்.
தல அமைப்பு :
விழுப்புரம் வழுதரெட்டி முருகன் கோவில் அழகிய கோபுரங்கள் மற்றும் சிற்பங்களுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் முருகன் கையில் வேலுடன் வள்ளி, தெய்வானை சமேதராக நின்ற திருக்கோலத்தில் வீற்றிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் உற்சவர், விநாயகர், கோஷ்ட தெய்வங்கள், சிவபெருமான், நவக்கிரகங்கள் உட்பட அனைத்துத் தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
மங்கல வாழ்வு பெற, வல்வினைகள் தீர, நினைத்தது நிறைவேற, பிணிகள் அகல, திருமணத்தடை நீங்க, சந்தான பாக்கியம் வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, நோய்கள் குணமடைய, நல்லன அருள, மன அமைதி உண்டாக, செல்வம் பெருக, கவலைகள் போக்க, வியாபாரம், தொழில் மேம்பட, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
வல்வினைகள் தீர்த்தருளும் விழுப்புரம் வழுதரெட்டி முருகனை மனமுருக பிரார்த்திப்போம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏼🙏🏼
படம் 1 - 1911 மங்கல வாழ்வு அருளும் விழுப்புரம் வழுதரெட்டி முருகன்
Comments
Post a Comment