கோவில் 1909 - விழுப்புரம் சித்தாத்தூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏼🙏🏼

தினம் ஒரு முருகன் ஆலயம்-1909

செல்வம் பெருக அருளும் விழுப்புரம் சித்தாத்தூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

30.08.2026 ஞாயிறு

அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM023064]

சித்தாத்தூர் 605701

கண்டாச்சிபுரம் வட்டம்

விழுப்புரம் மாவட்டம்

இருப்பிடம்: ஒதியத்தூர் அறுபடை முருகன் கோவில் 7 கிமீ, கண்டாச்சிபுரம் 10 கிமீ, திருக்கோவிலூர் 16 கிமீ, விக்கிரவாண்டி 35 கிமீ, திருவண்ணாமலை 38 கிமீ, விழுப்புரம் 47 கிமீ


மூலவர்: சிவசுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை

உற்சவர்: சிவசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை


தல மகிமை:

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் சித்தாத்தூர் கிராமத்தில் செல்வம் பெருக அருளும் விழுப்புரம் சித்தாத்தூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலிற்கு அருகாமையில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஒதியத்தூர் அறுபடை முருகன் கோவில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பம்சம்.


பிரசித்திப் பெற்ற ஒதியத்தூர் அறுபடை முருகன் கோவிலிலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது கண்டாச்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 10 கிமீ தொலைவு அல்லது திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 16 கிமீ தொலைவு அல்லது 30 கிமீ விக்கிரவாண்டி பேருந்து நிலையத்திலிருந்து 35 கிமீ தொலைவு அல்லது திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து 38 கிமீ தொலைவு அல்லது மாவட்டத் தலைநகரம் விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து 47 கிமீ தொலைவு பிரயாணம் செய்தால் விழுப்புரம் சித்தாத்தூர் சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமி மூலவராக அருள்புரிகின்றார்.


விழுப்புரம் சித்தாத்தூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் முக்கியத் திருவிழாவாக்களாக சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றன. மேலும் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்துத் திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை போன்ற நன்னாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

தல வரலாறு:

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் சித்தாத்தூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பழமையான கோவிலாகும். தற்போது இந்து அறநிலையத் துறை இத்திருக்கோவில் நிர்வாகத்தை நிர்வகித்து வருகிறது.


தல அமைப்பு :

விழுப்புரம் சித்தாத்தூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகம விதிகளின் படி அழகிய கோபுரங்கள் மற்றும் சிற்பங்களுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சிவசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் உற்சவர், விநாயகர், சிவபெருமான், அம்பாள், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவக்கிரகங்கள் உள்ளிட்ட எல்லா தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை, சஷ்டி, கிருத்திகை

பிரார்த்தனை:

செல்வம் பெருக, பிணிகள் தீர, எண்ணியவை ஈடேற, வினைகள் விலக, திருமணத்தடை நீங்க, சந்தான பாக்கியம் வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, உடல் ஆரோக்கியம் உண்டாக, நல்லன அருள, மன அமைதி கிட்ட, நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்க, கஷ்டங்கள் போக்க, கல்வி, ஞானம் சிறக்க, தோஷங்கள் அகல


நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


பிணிகள் தீர்க்கும் விழுப்புரம் சித்தாத்தூர் சிவசுப்பிரமணிய சுவாமி திருவடி பணிந்து தொழுதிடுவோம்!

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!

முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

🙏🏼🙏🏼


படம் 1 - 1909 செல்வம் பெருக அருளும் விழுப்புரம் சித்தாத்தூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்


படம் 2 - 1909 பிணிகள் தீர்க்கும் விழுப்புரம் சித்தாத்தூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்


Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்