கோவில் 1908 - விழுப்புரம் முக்குணம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏼🙏🏼

தினம் ஒரு முருகன் ஆலயம்-1908

சங்கடங்கள் தீர்க்கும் விழுப்புரம் முக்குணம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

29.08.2026 சனி

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM022880]

முக்குணம் 604203

செஞ்சி வட்டம்

விழுப்புரம் மாவட்டம்

இருப்பிடம்: மேல் ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் 3 கிமீ, செஞ்சி 19 கிமீ, மேல்மலையனூர் 30 கிமீ விழுப்புரம் 30 கிமீ, திண்டிவனம் 32 கிமீ, மயிலம் சுப்பிரமணியர் கோவில் 38 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை

உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை


தல மகிமை:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் முக்குணம் கிராமத்தில் சங்கடங்கள் தீர்க்கும் விழுப்புரம் முக்குணம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் உள்ள 23 அடி கொடிமரம் கும்பாபிஷேகம் 02.04.2025 அன்று நடைபெற்றது. இத்திருக்கோவிலிற்கு அருகாமையில் மிகவும் பிரசித்திப் பெற்ற மேல் ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பம்சம்.


பிரசித்திப் பெற்ற மேல் ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலிலிருந்து 3 கிமீ தொலைவு அல்லது செஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து 19 கிமீ தொலைவு அல்லது மேல்மலையனூர் பேருந்து நிலையத்திலிருந்து 30 கிமீ தொலைவு அல்லது மாவட்டத் தலைநகரம் விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து 30 கிமீ தொலைவு அல்லது திண்டிவனம் பேருந்து நிலையத்திலிருந்து 32 கிமீ தொலைவு அல்லது சிறப்பு மிக்க மயிலம் சுப்பிரமணியர் கோவிலிலிருந்து 38 கிமீ தொலைவு பிரயாணம் செய்தால் விழுப்புரம் முக்குணம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக ஆற்றலுடன் அருள்பாலிக்கின்றார்.


விழுப்புரம் முக்குணம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கோவிலில் தைப்பூசம் முக்கியத் திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறுகின்றது. பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு காவடி ஏந்தி பங்குனி உத்திரத் திருவிழா சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்துத் திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை முதலான நன்னாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.

தல வரலாறு:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் முக்குணம் சுப்பிரமணிய சுவாமி கோவில் இப்பகுதியில் பிரசித்திப் பெற்ற முருகப்பெருமான் திருக்கோவிலாகும். இந்து அறநிலையத் துறை இத்திருக்கோவில் நிர்வாகத்தை தற்போது நிர்வகித்து வருகிறது. இத்திருக்கோவிலில் அமைந்துள்ள புதிய, பொலிவான 23 அடி கொடிமரம் கும்பாபிஷேகம் 02.04.2025 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.


தல அமைப்பு :

விழுப்புரம் முக்குணம் சுப்பிரமணிய சுவாமி கோவில் மலை மீது பொலிவுடன் அமைந்துள்ளது. மலைக் கோவிலுக்குச் செல்ல நுழைவு கோபுரம் மற்றும் படிக்கட்டுகள் உள்ளன. இத்திருக்கோவிலினுள் நுழைந்த உடன் 23 அடி உயர அழகிய கொடிமரம் உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் உற்சவர், விநாயகர், சிவபெருமான், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்துத் பரிவார தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை, சஷ்டி, கிருத்திகை

பிரார்த்தனை:

சங்கடங்கள் தீர, நேர்மறை எண்ணங்கள் உருவாக, நினைத்தது நடக்க, வினைகள் போக்க, பிணிகள் தீர, திருமண பாக்கியம் வேண்டி, குழந்தை பாக்கியம் கிட்ட, குடும்ப ஒற்றுமை ஓங்க, நோய்கள் நீங்க, நல்லன நடைபெற, மன அமைதி உண்டாக, தீயவை அகல, தொழில், வியாபாரம் மேம்பட, ஆனந்தம் மலர, தோஷங்கள் விலக


நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


நேர்மறை எண்ணங்களை உருவாக்கும் விழுப்புரம் முக்குணம் சுப்பிரமணிய சுவாமியை மனமுருக வேண்டுவோம்!

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!

முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

🙏🏼🙏🏼


படம் 1 - 1908 சங்கடங்கள் தீர்க்கும் விழுப்புரம் முக்குணம் சுப்பிரமணிய சுவாமி


படம் 2 - 1908 நேர்மறை எண்ணங்களை உருவாக்கும் விழுப்புரம் முக்குணம் சுப்பிரமணிய சுவாமி

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்