கோவில் 1907 - விழுப்புரம் தென்பேர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏼🙏🏼
தினம் ஒரு முருகன் ஆலயம்-1907
மங்கல வாழ்வு அருளும் விழுப்புரம் தென்பேர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
28.08.2026 வெள்ளி
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM022777]
தென்பேர் 605654
விக்கிரவாண்டி வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
இருப்பிடம்: விக்கிரவாண்டி 11 கிமீ, மயிலம் சுப்பிரமணியர் கோவில் 19 கிமீ, விழுப்புரம் 24 கிமீ, திண்டிவனம் 28 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை
தல மகிமை:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் தென்பேர் கிராமத்தில் மங்கல வாழ்வு அருளும் விழுப்புரம் தென்பேர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
விக்கிரவாண்டி பேருந்து நிலையத்திலிருந்து 11 கிமீ தொலைவு அல்லது மயிலம் சுப்பிரமணியர் கோவிலிலிருந்து 19 கிமீ தொலைவு அல்லது மாவட்டத் தலைநகரம் விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து 24 கிமீ தொலைவு அல்லது திண்டிவனம் பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவு பிரயாணம் செய்தால் விழுப்புரம் தென்பேர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை உடன் வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றார்.
விழுப்புரம் தென்பேர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலமாக நடைபெறுகின்றது. தைப்பூசத் திருவிழா சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் முருகப்பெருமானின் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் பழமையான தென்பேர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இப்பகுதியில் சிறப்பு மிக்க திருக்கோவிலாகும். தற்போது இந்து அறநிலையத் துறை இத்திருக்கோவில் நிர்வாகத்தை நிர்வகித்து வருகிறது.
தல அமைப்பு :
விழுப்புரம் தென்பேர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகம விதிகளின் படி கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கைய்ல் வேலுடன் வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் உற்சவர், விநாயகர், பழனி ஆண்டவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட எல்லா தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
மங்கல வாழ்வு கிடைக்க, மன மகிழ்ச்சி பெற, வேண்டியவை நிறைவேற, திருமணத்தடை அகல, சந்தான பாக்கியம் வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, நோய்கள் குணமடைய, கல்வி, ஞானம் சிறக்க, வியாபாரம் விருத்தியடைய, அல்லல்கள் தீர, நல்லன அருள, ஆனந்தம் பொங்க, வினைகள் விலக, பிணிகள் போக்க, தோஷங்கள் நீங்க
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
மன மகிழ்ச்சி தரும் விழுப்புரம் தென்பேர் சுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏼🙏🏼
படம் 1 - 1907 மங்கல வாழ்வு அருளும் விழுப்புரம் தென்பேர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
Comments
Post a Comment