கோவில் 1879 - இங்கிலாந்து நியூனேட்டன் கந்தசுவாமி கோவில்

 🙏🏼🙏🏼 தினம் ஒரு கந்தசுவாமி ஆலயம்-1879

விருப்பங்களை நிறைவேற்றும் இங்கிலாந்து நியூனேட்டன் கந்தசுவாமி கோவில்

31.07.2026 வெள்ளி

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவில்

93 Arbury Road

Stockingford

CV10 7NJ நியூனேட்டன் [Nuneaton]

வார்விக்ஷயர் கவுண்டி [Warwickshire County]

இங்கிலாந்து [England]

யு. கே. [UK}

[ஐக்கிய ராஜ்ஜியம்]

இருப்பிடம்: நியூனேட்டன் [Nuneaton] 3 கிமீ, கோவென்ட்ரி [Coventry] 16 கிமீ, லெஸ்டர் [Leicester] 35 கிமீ, பர்மிங்காம் [Birmingham] 42 கிமீ, வாட்ஃபோர்ட் [Watford] 88 கிமீ, லண்டன் [London] 165 கிமீ,


மூலவர்: கந்தசுவாமி

உற்சவர்: ஆறுமுக சுவாமி (கந்தசுவாமி) வள்ளி, தெய்வானை

தல மகிமை:

ஐக்கிய ராஜ்ஜியம் இங்கிலாந்து நாட்டில் வார்விக்ஷயர் கவுண்டியில் [Warwickshire County] நியூனேட்டன் [Nuneaton] நகரத்தில் விருப்பங்களை நிறைவேற்றும் இங்கிலாந்து நியூனேட்டன் [Nuneaton] கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது.

நியூனேட்டன் [Nuneaton] நகரத்திலிருந்து 3 கிமீ தொலைவு அல்லது கோவென்ட்ரி [Coventry] நகரத்திலிருந்து 16 கிமீ தொலைவு அல்லது லெஸ்டர் [Leicester] நகரத்திலிருந்து 35 கிமீ தொலைவு அல்லது பர்மிங்காம் [Birmingham] நகரத்திலிருந்து 42 கிமீ தொலைவு அல்லது வாட்ஃபோர்ட் [Watford] நகரத்திலிருந்து 88 கிமீ தொலைவு அல்லது இங்கிலாந்து தலைநகரம் லண்டன் [London] மாநகரத்திலிருந்து 165 கிமீ தொலைவு பிரயாணம் செய்தால் இங்கிலாந்து நியூனேட்டன் கந்தசுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் கந்தசுவாமி மூலவராக வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றார்.

இங்கிலாந்து நியூனேட்டன் கந்தசுவாமி திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி திருவிழா 7 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. தினசரி சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. 5-ம் கந்தசுவாமி அன்னையிடம் இருந்து வேல் வாங்கும் நிகழ்வு, 6-ம் நாள் சூரசம்ஹாரம், 7-ம் நாள் கந்தசுவாமி வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் என விமரிசையாக நடைபெறுகின்றது. ஏராளாமான முருக பக்தர்கள் கந்த சஷ்டி விரதமிருந்து, பெருமானை வழிபட்டு நற்பலன்கள் பெற்று செல்கின்றனர். தைப்பூசத் திருவிழா சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் முருகப்பெருமானுக்குரிய பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்து நன்னாட்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை போன்ற நன்னாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன. மேலும் மகா சிவராத்திரி, சித்ரா பௌர்ணமி, விநாயகர் சதுர்த்தி, மார்கழி பூஜை, பொங்கல், தீபாவளி, புத்தாண்டு தினம், அமாவாசை, பௌர்ணமி, ஆடிப்பூரம், நவராத்திரி, கேதார கௌரி விரதம் உள்ளிட்ட அனைத்து இந்து பண்டிகை நாட்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.

தல வரலாறு:

இங்கிலாந்து நியூனேட்டன் கந்தசுவாமி கோவில் வார்விக்ஷயர் கவுண்டி [Warwickshire County] பகுதியில் ஒரு முக்கியமான முருகப்பெருமான் திருக்கோவிலாகும். .

தல அமைப்பு :

இங்கிலாந்து நியூனேட்டன் கந்தசுவாமி கோவில் அழகிய வடிவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் உள்ளே கொடிமரம் உள்ளது. இத்திருக்கோவிலில் கந்தசுவாமி மூலவராக கையில் வேலுடன் ஆற்றலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் வேல், மயில், பலிபீடம் உள்ளன, மேலும் உற்சவர், விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சிவபெருமான், தேவி பார்வதி, அம்மன், பெருமாள், தேவியர், பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட எல்லா பரிவார தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

திருவிழா:

கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை, மகா சிவராத்திரி, சித்ரா பௌர்ணமி,, விநாயகர் சதுர்த்தி, மார்கழி பூஜை, பொங்கல், தீபாவளி, புத்தாண்டு தினம், அமாவாசை, பௌர்ணமி, ஆடிப்பூரம், நவராத்திரி, கேதார கௌரி விரதம்

பிரார்த்தனை:

விருப்பங்கள் நிறைவேற, அல்லல்கள் அகல, வினைகள் போக்க, பிணிகள் அகல, சந்தான பாக்கியம் வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, உடல் ஆரோக்கியம் கிட்ட, நல்லன அருள, மன நிம்மதி கிடைக்க, வாழ்வில் முன்னேற்றம் அடைய, ஞானம் மேம்பட, தொழில், வியாபாரம் விருத்தியடைய, செல்வம் பெருக, தோஷங்கள் விலக

நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்

அல்லல்கள் அகற்றும் இங்கிலாந்து நியூனேட்டன் கந்தசுவாமியை போற்றி வணங்குவோம்!

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!

முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

🙏🏼🙏🏼


படம் 1 - 1879 விருப்பங்களை நிறைவேற்றும் இங்கிலாந்து நியூனேட்டன் கந்தசுவாமி



படம் 2 - 1879 அல்லல்கள் அகற்றும் இங்கிலாந்து நியூனேட்டன் கந்தசுவாமி

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்