கோவில் 1878 - இங்கிலாந்து நோர்ஃபோக் முருகன் கோவில்
🙏🏼🙏🏼
தினம் ஒரு முருகன் ஆலயம்-1878
நல்லன அருளும் இங்கிலாந்து நோர்ஃபோக் முருகன் கோவில்
30.07.2026 வியாழன்
அருள்மிகு முருகன் திருக்கோவில்
Orchard End
25 Pigot Lane, Framingham earl
NR14 7PX நார்விச் [Norwich]
நோர்ஃபோக் கவுண்டி [Norfolk County]
[நார்ஃபோக்/நோர்போக்]
இங்கிலாந்து [England]
யு. கே. [UK}
[ஐக்கிய ராஜ்ஜியம்]
இருப்பிடம்: நார்விச் [Norwich] 8 கிமீ, இப்ஸ்விச் [Ipswich] 68 கிமீ, கேம்பிரிட்ஜ் [Cambridge] 107 கிமீ, பீட்டர்பரோ [Peterborough] 171 கிமீ, லண்டன் [London] 193 கிமீ,
மூலவர்: முருகன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
ஐக்கிய ராஜ்ஜியம் இங்கிலாந்தில் நோர்ஃபோக் கவுண்டியில் [Norfolk County] நோர்ஃபோக் [Norfolk] நகரத்தில் நல்லன அருளும் இங்கிலாந்து நோர்ஃபோக் [Norfolk] முருகன் கோவில் அமைந்துள்ளது. நார்ஃபோக் (Norfolk) கிழக்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு அழகான மற்றும் அமைதியான மாவட்டமாகும். இதன் தலைநகரம் நார்விச் ஆகும். நார்விச் நகரில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பேராலயம் உள்ளது.
நார்விச் [Norwich] நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது இப்ஸ்விச் [Ipswich] நகரத்திலிருந்து 68 கிமீ தொலைவு அல்லது கேம்பிரிட்ஜ் [Cambridge] நகரத்திலிருந்து 107 கிமீ தொலைவு அல்லது பீட்டர்பரோ [Peterborough] நகரத்திலிருந்து 171 கிமீ தொலைவு அல்லது இங்கிலாந்து தலைநகரம் லண்டன் [London] மாநகரத்திலிருந்து 193 கிமீ தொலைவு பிரயாணம் செய்தால் இங்கிலாந்து நோர்ஃபோக் முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருந்து அருளாட்சி செய்கின்றார்..
இங்கிலாந்து நோர்ஃபோக் முருகன் திருக்கோவிலில் தைப்பூசம் மற்றும் கந்த சஷ்டி திருவிழாக்கள் சிறப்புப் பூஜைகள் விமரிசையாக நடைபெறுகின்றன. மேலும் முருகப்பெருமானுக்குரிய பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் திருக்கார்த்திகை உட்பட திருநாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை போன்ற நன்னாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன. மேலும் மகா சிவராத்திரி, சித்ரா பௌர்ணமி, விநாயகர் சதுர்த்தி, மார்கழி பூஜை, பொங்கல், தீபாவளி, புத்தாண்டு தினம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட அனைத்து இந்து பண்டிகை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
இங்கிலாந்து நோர்ஃபோக் முருகன் கோவில் நோர்ஃபோக் கவுண்டி வாழ் தமிழர்கள் பெரும் உதவியுடன் கட்டி, நிர்வகிக்கப்படுகிறது .
தல அமைப்பு :
இங்கிலாந்து நோர்ஃபோக் முருகன் கோவில் மிகவும் நேர்த்தியாக எழுப்பப்பட்டுள்ளது. கொடிமரம் உள்ளது. இத்திருக்கோவிலில் வள்ளி, தெய்வானை சமேதராக முருகன் மூலவராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன, மேலும் இத்திருக்கோவிலில் உற்சவர், விநாயகர், சிவபெருமான், அன்னை பார்வதி, தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள் உள்ளிட்ட எல்லா தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை, மகா சிவராத்திரி, சித்ரா பௌர்ணமி,, விநாயகர் சதுர்த்தி, மார்கழி பூஜை, பொங்கல், தீபாவளி, புத்தாண்டு தினம், அமாவாசை, பௌர்ணமி, ஆடிப் பூரம், நவராத்திரி
பிரார்த்தனை:
நல்லன அருள, பெற மன மகிழ்ச்சி பெற, கல்வி, ஞானம் சிறக்க, தொழில், வியாபாரம் மேம்பட, சகல ஐஸ்வர்யங்கள் பெருக, திருமணத்தடை நீங்க, குழந்தை செல்வம் வேண்டி, வினைகள் நீங்க, பிணிகள் போக்க, தீராத நோய்கள் குணமடைய, எண்ணியது நடைபெற, நேர்மறை சிந்தனைகள் உண்டாக, பாவங்கள் தீர, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
மாலை 6.30-8.30 வரை [வெள்ளி மட்டும்]
மன மகிழ்ச்சி தந்தருளும் இங்கிலாந்து நோர்ஃபோக் முருகனை மனமொன்றி வேண்டிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏼🙏🏼
படம் 1 - 1878 நல்லன அருளும் இங்கிலாந்து நோர்ஃபோக் முருகன்
படம் 2 - 1878 மன மகிழ்ச்சி தந்தருளும் இங்கிலாந்து நோர்ஃபோக் முருகன்
Comments
Post a Comment