கோவில் 1877 - இங்கிலாந்து லீட்ஸ் முருகன் கோவில்
🙏🏼🙏🏼
தினம் ஒரு முருகன் ஆலயம்-1877
ஞானம் மேம்பட அருளும் இங்கிலாந்து லீட்ஸ் முருகன் கோவில்
29.07.2026 புதன்
அருள்மிகு முருகன் திருக்கோவில்
Leeds Hindu Mandir
36 Alexandra Road
LS6 1RF லீட்ஸ் [Leeds]
மேற்கு யார்க்ஷயர் கவுண்டி [West Yorkshire County]
இங்கிலாந்து [England]
யு. கே. [UK}
[ஐக்கிய ராஜ்ஜியம்]
இருப்பிடம்: லீட்ஸ் [Leeds] 3 கிமீ, பிராட்போர்டு [Bradford] 22 கிமீ, ஷெஃபீல்ட் [Sheffield] 68 கிமீ, மான்செஸ்டர் [Manchester] 72 கிமீ, லண்டன் [London] 316 கிமீ,
மூலவர்: முருகன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
ஐக்கிய ராஜ்ஜியம் இங்கிலாந்தில் மேற்கு யார்க்ஷயர் கவுண்டியில் [West Yorkshire County] லீட்ஸ் [Leeds] நகரத்தில் ஞானம் மேம்பட அருளும் இங்கிலாந்து லீட்ஸ் [Leeds] முருகன் கோவில் அமைந்துள்ளது.
லீட்ஸ் [Leeds] நகரத்திலிருந்து 3 கிமீ தொலைவு அல்லது பிராட்போர்டு [Bradford] நகரத்திலிருந்து 22 கிமீ தொலைவு அல்லது ஷெஃபீல்ட் [Sheffield] நகரத்திலிருந்து 68 கிமீ தொலைவு அல்லது மான்செஸ்டர் [Manchester] நகரத்திலிருந்து 72 கிமீ தொலைவு அல்லது இங்கிலாந்து தலைநகரம் லண்டன் [London] மாநகரத்திலிருந்து 316 கிமீ தொலைவு பிரயாணம் செய்தால் இங்கிலாந்து லீட்ஸ் முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் முருகன் வள்ளி, தெய்வானை சமேதராக அருள்புரிகின்றார்..
இங்கிலாந்து லீட்ஸ் முருகன் திருக்கோவிலில் தைப்பூசம் முக்கியத் திருவ்ழாவாகக் கொண்டாடப்படுகின்றது. கந்த சஷ்டி பெருவிழா 7 நாட்கள் தினசரி பூஜைகளுடன் சிறப்பாக நடைபெறுகிகின்றது. 6-ம் நாள் மாலை சூரம்சம்ஹாரம், 7-ம் நாள் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது. மேலும் முருகப்பெருமானுக்குரிய பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் திருக்கார்த்திகை, ஆடி வேல் பூஜை உள்ளிட்ட நன்னாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை போன்ற திருநாட்களில் சிறப்புப் பூஜைகள் நடக்கின்றன. மேலும் மகா சிவராத்திரி, சித்ரா பௌர்ணமி,, விநாயகர் சதுர்த்தி, மார்கழி பூஜை, பொங்கல், தீபாவளி, புத்தாண்டு தினம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட அனைத்து இந்து பண்டிகை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
லீட்ஸ் வாழ் தமிழர்கள் உதவியுடன் லீட்ஸ் முருகன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் மிகவும் சிறப்பு மிக்க பெற்ற முருகப்பெருமான் கோவிலாக திகழ்கின்றது.
தல அமைப்பு :
இங்கிலாந்து லீட்ஸ் முருகன் கோவில் பொலிவான கோபுரங்கள் மற்றும் சிற்பங்களுடன் கட்டப்பட்டுள்ளது. அழகிய கொடிமரம் உள்ளது. இத்திருக்கோவிலில் மூலவர் முருகன் வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன, மேலும் இத்திருக்கோவிலில் உற்சவர், விநாயகர், சிவபெருமான், அன்னை பார்வதி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, ராதை, கிருஷணர், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடி வேல் பூஜை, சஷ்டி, கிருத்திகை, மகா சிவராத்திரி, சித்ரா பௌர்ணமி,, விநாயகர் சதுர்த்தி, மார்கழி பூஜை, பொங்கல், தீபாவளி, புத்தாண்டு தினம், அமாவாசை, பௌர்ணமி, ஆடிப் பூரம், நவராத்திரி
பிரார்த்தனை:
ஞானம் மேம்பட, மங்கல வாழ்வருள, கேட்டது பெற்றிட, வினைகள் விலக, பிணிகள் தீர, திருமணம் நடைபெற, குழந்தை பாக்கியம் வேண்டி, உடல்நிலை சீராக, குடும்ப வாழ்வு சிறக்க, நல்லன அருள, மன மகிழ்ச்சி கிட்ட, நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்க, செல்வம் பெருக, எண்ணியது ஈடேற, தோஷங்கள் போக்க
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 9.30-12.30 மாலை 6-8.30 வரை
மங்கல வாழ்வருளும் இங்கிலாந்து லீட்ஸ் முருகன் திருத்தாள் பணிந்திடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
படம் 1 - 1877 ஞானம் மேம்பட அருளும் இங்கிலாந்து லீட்ஸ் முருகன்
படம் 2 - 1877 மங்கல வாழ்வருளும் இங்கிலாந்து லீட்ஸ் முருகன்
Comments
Post a Comment