கோவில் 1876 - இங்கிலாந்து லண்டன் கேட்ஃபோர்ட் வேல்முருகன் கோவில்

 🙏🏼🙏🏼

தினம் ஒரு முருகன் ஆலயம்-1876

வெற்றிகளை அள்ளித் தரும் இங்கிலாந்து லண்டன் கேட்ஃபோர்ட் வேல்முருகன் கோவில்

28.07.2026 செவ்வாய்

அருள்மிகு வேல்முருகன் திருக்கோவில்

18A Holbeach Road

கேட்ஃபோர்ட் [Catford]

SE6 4TW லண்டன் [London]

கிரேட்டர் லண்டன் கவுண்டி [Greater London County]

இங்கிலாந்து [England]

யு. கே. [UK}

[ஐக்கிய ராஜ்ஜியம்]

இருப்பிடம்: கேட்ஃபோர்ட் [Catford] 1 கிமீ, லூயிஷம் [Lewisham] 2.5 கிமீ, கிரீன்விச் [Greenwich] 5 கிமீ, லண்டன் மெட்ரோ நிலையம் [London Metro Station] 14 கிமீ,


மூலவர்: வேல்முருகன் (ஞான வேல்)

உற்சவர்: வேல்முருகன் வள்ளி, தெய்வானை

தோற்றம்: 1998

தல மகிமை:

ஐக்கிய ராஜ்ஜியம் இங்கிலாந்தில் கிரேட்டர் லண்டன் கவுண்டியில் [Greater London County] கேட்ஃபோர்ட் [Catford] நகரத்தில் வெற்றிகளை அள்ளித் தரும் இங்கிலாந்து லண்டன் கேட்ஃபோர்ட் [Catford] வேல்முருகன் கோவில் அமைந்துள்ளது.

லண்டன் கேட்ஃபோர்ட் [Catford] நகரத்திலிருந்து 1 கிமீ தொலைவு அல்லது லூயிஷம் [Lewisham] நகரத்திலிருந்து 2.5 கிமீ தொலைவு அல்லது கிரீன்விச் [Greenwich] நகரத்திலிருந்து 5 கிமீ தொலைவு அல்லது இங்கிலாந்து தலைநகரம் லண்டன் [London] மாநகர மெட்ரோ நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவு பிரயாணம் செய்தால் இங்கிலாந்து லண்டன் கேட்ஃபோர்ட் வேல்முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் வேல்முருகன் ஞான வேலாக, வேலாயுத மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார்.

இங்கிலாந்து லண்டன் கேட்ஃபோர்ட் வேல்முருகன் திருக்கோவிலில் தைப்பூசம் திருவிழா சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. கந்த சஷ்டி பெருவிழா 7 நாட்கள் தினசரி சிறப்புப் பூஜைகளுடன் வெகுச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. 6-ம் நாள் மாலை சூரம்சம்ஹாரம், 7-நம் நாள் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது. மேலும் முருகப்பெருமானுக்குரிய பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் திருக்கார்த்திகை, ஆடி வேல் பூஜை உள்ளிட்ட நன்னாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை போன்ற திருநாட்களில் சிறப்புப் பூஜைகள் நடக்கின்றன. மேலும் மகா சிவராத்திரி, சித்ரா பௌர்ணமி,, விநாயகர் சதுர்த்தி, மார்கழி பூஜை, பொங்கல், தீபாவளி, புத்தாண்டு தினம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட அனைத்து இந்து பண்டிகை நாட்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.

தல வரலாறு:

லண்டன் கேட்ஃபோர்ட் வாழ் தமிழர்கள் பேருதவியுடன் லண்டன் கேட்ஃபோர்ட் வேல்முருகன் கோவில் கட்டப்பட்டு 1998-ல் தொடங்கப்பட்டு அதிக சாநித்யம் பெற்ற முருகப்பெருமான் கோவிலாக திகழ்கின்றது. லண்டன் கேட்ஃபோர்ட் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 22.01.2018 அன்று வெகுச் சிறப்பாக மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தல அமைப்பு :

இங்கிலாந்து லண்டன் கேட்ஃபோர்ட் வேல்முருகன் கோவில் தமிழக திருக்கோவில்களை போலவே ஆகம விதிகளின் படியே எழுப்பப்பட்டுள்ளது. அழகிய கொடிமரமும் உள்ளது. இத்திருக்கோவிலில் மூலவர் வேல்முருகன் ஞான வேலாக, வேலாயுத மூர்த்தியாக வேல் வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன, மேலும் இத்திருக்கோவிலில் உற்சவர், விநாயகர், சிவபெருமான், அன்னை பார்வதி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவக்கிரகங்கள் உள்ளிட்ட எல்லாத் தெய்வங்களும் ஆற்றலுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

திருவிழா:

தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடி வேல் பூஜை, சஷ்டி, கிருத்திகை, மகா சிவராத்திரி, சித்ரா பௌர்ணமி,, விநாயகர் சதுர்த்தி, மார்கழி பூஜை, பொங்கல், தீபாவளி, புத்தாண்டு தினம், அமாவாசை, பௌர்ணமி, ஆடிப் பூரம், நவராத்திரி

பிரார்த்தனை:

வெற்றிகளை அள்ளித் தர, நல்வரங்களை வாரி வழங்க, ஞானம் மேம்பட, விருப்பங்கள் நிறைவேற, நல்ல எண்ணங்கள் உருவாக, குழந்தைப்பேறு வேண்டி, நோய்கள் நீங்க, நல்லன அருள, மன தைரியம் கிட்ட, சகல சௌபாக்கியங்கள் பெற, அல்லல்கள் அகல, ஆனந்தம் பொங்க, வினைகள் தீர, பிணிகள் விலக, தொழில், வியாபாரம் விருத்தியடைய, தோஷங்கள் போக்க

நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்

திறக்கும் நேரம்:

காலை 8-1 மாலை 5-9 வரை

நல்வரங்களை வாரி வழங்கும் இங்கிலாந்து லண்டன் கேட்ஃபோர்ட் வேல்முருகனை மனமுருக பிரார்த்திப்போம்!

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!

முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

🙏🏼🙏🏼


படம் 1 - 1876 வெற்றிகளை அள்ளித் தரும் இங்கிலாந்து லண்டன் கேட்ஃபோர்ட் வேல்முருகன் [ஞான வேல்/வேலாயுத மூர்த்தி]



படம் 2 - 1876 நல்வரங்களை வாரி வழங்கும் இங்கிலாந்து லண்டன் கேட்ஃபோர்ட் வேல்முருகன் கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்