கோவில் 1875 - இங்கிலாந்து மிடில்ஸ்பரோ திருமுருகன் கோவில்
தினம் ஒரு முருகன் ஆலயம்-1875
வேண்டும் வரமருளும் இங்கிலாந்து மிடில்ஸ்பரோ திருமுருகன் கோவில்
27.07.2026 திங்கள்
அருள்மிகு திருமுருகன் திருக்கோவில்
6 Lorne Street
TS1 5QY மிடில்ஸ்பரோ [Middlesbrough]
[பரோ/Boro]
யார்க்ஷயர் கவுண்டி [Yorkshire County]
இங்கிலாந்து [England]
யு. கே. [UK}
[ஐக்கிய ராஜ்ஜியம்]
இருப்பிடம்: மிடில்ஸ்பரோ [Middlesbrough] 1.5 கிமீ, டர்ஹாம் [Durham] 37 கிமீ, சண்டர்லேண்ட் [Sunderland] 45 கிமீ, லீட்ஸ் [Leeds] 104 கிமீ, லண்டன் [London] 412 கிமீ
மூலவர்: திருமுருகன்
உற்சவர்: திருமுருகன் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
ஐக்கிய ராஜ்ஜியம் வடகிழக்கு இங்கிலாந்தில் யார்க்ஷயர் கவுண்டியில் [Yorkshire County] மிடில்ஸ்பரோ [Middlesbrough] நகரத்தில் வேண்டும் வரமருளும் இங்கிலாந்து மிடில்ஸ்பரோ [Middlesbrough] திருமுருகன் கோவில் அமைந்துள்ளது.
மிடில்ஸ்பரோ [Middlesbrough] நகரத்திலிருந்து 1.5 கிமீ தொலைவு அல்லது டர்ஹாம் [Durham] நகரத்திலிருந்து 37 கிமீ தொலைவு அல்லது சண்டர்லேண்ட் [Sunderland] நகரத்திலிருந்து 45 கிமீ தொலைவு அல்லது இங்கிலாந்து தலைநகரம் லண்டன் [London] மாநகரத்திலிருந்து 412 கிமீ தொலைவு பிரயாணம் செய்தால் இங்கிலாந்து மிடில்ஸ்பரோ திருமுருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் திருமுருகன் ஞானமருளும் மூலவராக அருளாட்சி புரிகின்றார்.
இங்கிலாந்து மிடில்ஸ்பரோ திருமுருகன் திருக்கோவிலில் தைப்பூசம் வருடந்தோறும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி திருவிழாவில் ஏராளமான தமிழ் பக்தர்கள் விரதமிருந்து தினசரி சிறப்புப் பூஜைகளுடன் நடைபெறுகிறது. மேலும் முருகப்பெருமானுக்குரிய பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் திருக்கார்த்திகை உள்ளிட்ட திருநாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன. மேலும் மகா சிவராத்திரி, சித்ரா பௌர்ணமி,, விநாயகர் சதுர்த்தி, மார்கழி பூஜை, பொங்கல், தீபாவளி, புத்தாண்டு தினம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட அனைத்து இந்து பண்டிகை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
ஏராளமான தமிழர்கள் வாழும் நகரில் மிடில்ஸ்பரோ திருமுருகன் கோவில் மிகவும் பிரசித்திப் பெற்ற திருக்கோவில் ஆகும்.
தல அமைப்பு :
இங்கிலாந்து மிடில்ஸ்பரோ திருமுருகன் கோவில் அழகிய அமைப்பை கொண்டுள்ளது. இத்திருக்கோவிலில் மூலவர் திருமுருகன் கையில் வேலுடன் பொலிவான தோற்றத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், சிவபெருமான், உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் இத்திருக்கோவிலில் ஆற்றலுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை, மகா சிவராத்திரி, சித்ரா பௌர்ணமி,, விநாயகர் சதுர்த்தி, மார்கழி பூஜை, பொங்கல், தீபாவளி, புத்தாண்டு தினம், அமாவாசை, பௌர்ணமி, ஆடிப் பூரம், நவராத்திரி
பிரார்த்தனை:
வேண்டும் வரம் தர, நேர்மறை ஆற்றல் பெற, செல்வம் பெருக, பிணிகள் தீர, எதிரிகள் மறைய, ஞானம் மேம்பட, குழந்தைச் செல்வம் வேண்டி, உடல் ஆரோக்கியம் உண்டாக, மன மகிழ்ச்சி பெற, தொழில் சிறக்க, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 10-12 மாலை 6-8.30 வரை
நேர்மறை ஆற்றலை தரும் இங்கிலாந்து மிடில்ஸ்பரோ திருமுருகனை பணிந்து வணங்கிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
Comments
Post a Comment