கோவில் 1874 - இங்கிலாந்து ஸ்டோன்லீ திருச்செந்தூர் முருகன் கோவில்

 🙏🙏                              

தினம் ஒரு முருகன் ஆலயம்-1874

குழந்தை வரமருளும் இங்கிலாந்து ஸ்டோன்லீ திருச்செந்தூர் முருகன் கோவில் 

26.07.2026 ஞாயிறு

 

அருள்மிகு திருச்செந்தூர் முருகன் திருக்கோவில்

[அ/மி ஸ்டோன்லீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் திருக்கோவில்]

4 Dell Ln

KT17 2NE ஸ்டோன்லீ [Stoneleigh]

சர்ரே கவுண்டி [Surrey County]

இங்கிலாந்து [England]

யு. கே. [UK}

[ஐக்கிய ராஜ்ஜியம்]

 

இருப்பிடம்: ஸ்டோன்லீ [Stoneleigh] 500 மீ, எப்சம் [Epsom] 5 கிமீ, கிங்ஸ்டன் அப்பான் தேம்ஸ் [Kingston upon Thames] 9 கிமீ, லண்டன் [London] 30 கிமீ


மூலவர்: திருச்செந்தூர் முருகன்

மூலவர்: ராஜ ராஜேஸ்வரி அம்மன்

உற்சவர்: திருச்செந்தூர் முருகன் வள்ளி, தெய்வானை & ராஜ ராஜேஸ்வரி அம்மன்

முருகன் தோற்றம்: 1995

 

தல மகிமை:

ஐக்கிய ராஜ்ஜியம் இங்கிலாந்து நாடு சர்ரே கவுண்டியில் [Surrey County] ஸ்டோன்லீ [Stoneleigh] நகரத்தில் குழந்தை வரமருளும் இங்கிலாந்து ஸ்டோன்லீ திருச்செந்தூர் முருகன் கோவில் அமைந்துள்ளது.  இத்திருக்கோவில் ஸ்டோன்லீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் திருக்கோவில் என்ற சிறப்புப் பெயருடனும் அழைக்கப்படுகிறது. ராஜ ராஜேஸ்வரி அம்மன் உடன் ஸ்டோன்லீ திருச்செந்தூர் முருகன் ஆற்றலுடன அருள்பாலித்துக் கொண்டு இருப்பதால், திருச்செந்தூர் முருகன் கோவிலை விஸ்தரிக்க இருப்பது சிறப்பம்சமாகும்.  

 

ஸ்டோன்லீ  [Stoneleigh] நகரத்திலிருந்து 500 மீ தொலைவு அல்லது எப்சம் [Epsom]  நகரத்திலிருந்து 5 கிமீ தொலைவு அல்லது கிங்ஸ்டன் அப்பான் தேம்ஸ் [Kingston upon Thames] நகரத்திலிருந்து 9 கிமீ தொலைவு அல்லது இங்கிலாந்து தலைநகரம் லண்டன் [London] மாநகரத்திலிருந்து 30 கிமீ தொலைவு பிரயாணம் செய்தால் இங்கிலாந்து ஸ்டோன்லீ  திருச்செந்தூர் முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் திருச்செந்தூர் முருகன் ஆற்றலுடன் அருள்புரிகின்றார்.

 

இங்கிலாந்து ஸ்டோன்லீ   திருச்செந்தூர் முருகன்   திருக்கோவிலில் தைப்பூசம் மற்றும் கந்த சஷ்டி திருநாட்கள் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. மேலும் முருகப்பெருமானுக்குரிய பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் திருக்கார்த்திகை உள்ளிட்ட திருநாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை தினங்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன. மேலும் மகா சிவராத்திரி, சித்ரா பௌர்ணமி,, விநாயகர் சதுர்த்தி, மார்கழி பூஜை, பொங்கல், தீபாவளி, புத்தாண்டு தினம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட அனைத்து இந்து பண்டிகை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.  ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு ஆடிப் பூரம், நவராத்திரி உள்ளிட்ட அனைத்துப் பண்டிகைகளும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

 

தல வரலாறு:

ஸ்டோன்லீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் திருக்கோவில் இங்கிலாந்து நாட்டின் முதல் இந்து கோவில் என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்து வந்த திருச்செந்தூர் முருகன் சில இடங்களில் வைத்து வழிபட்டு வந்து, 1995-ல் ஸ்டோன்லீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் திருக்கோவில் வளாகத்தில் அம்மன் அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஒவ்வொரு பிப்ரவரி மாதமும் முருகன் வருஷாபிஷேகம் மிக விமரிசையாக நடைபெறுகின்றது.

 

தல அமைப்பு :

இங்கிலாந்து ஸ்டோன்லீ  திருச்செந்தூர் முருகன்    கோவில் சிறிய கோவிலாக ஸ்டோன்லீ இந்து கோவில் வளாகத்தில்  அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் மூலவர் திருச்செந்தூர் முருகன் கையில் வேலுடன் வீற்றிருந்து ஆற்றலுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், சிவபெருமான், நடராஜர், துர்க்கை, கிருஷ்ணர், ராமர், லட்சுமணன், சீதா, ஆஞ்சநேயர் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் இத்திருக்கோவிலில் ஆற்றலுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

 

திருவிழா: 

தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை, மகா சிவராத்திரி, சித்ரா பௌர்ணமி,, விநாயகர் சதுர்த்தி, மார்கழி பூஜை, பொங்கல், தீபாவளி, புத்தாண்டு தினம், அமாவாசை, பௌர்ணமி, ஆடிப் பூரம், நவராத்திரி

 

பிரார்த்தனை:

குழந்தை வரம் வேண்டி, செல்வம் பெருக, வேண்டியது நிறைவேற,

வினைகள் அகல, பிணிகள் போக்க, திருமணம் நடைபெற, நோய்கள் குணமடைய, நல்லன அருள, மன நிம்மதி கிட்ட, கஷ்டங்கள் தீர, தொழில், வியாபாரம் மேம்பட, தோஷங்கள் விலக 

 

நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்

 

திறக்கும் நேரம்:

காலை 8.30-10.30 மாலை 6.30-8.30 வரை

 

செல்வம் பெருக அருளும் இங்கிலாந்து ஸ்டோன்லீ திருச்செந்தூர் முருகன் திருவடி தொழுதிடுவோம்!

 

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!

 

முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

🙏🙏






Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்