கோவில் 1849 - கள்ளக்குறிச்சி பாலப்பட்டு முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1849
பாவங்கள் போக்கியருளும் கள்ளக்குறிச்சி பாலப்பட்டு முருகன் கோவில்
01.07.2026 புதன்
அருள்மிகு முருகன் திருக்கோவில்
பாலப்பட்டு 606213
[சு. பாலப்பட்டு/Su. Palapattu]
சங்கராபுரம் வட்டம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம்
இருப்பிடம்: கள்ளக்குறிச்சி 20 கிமீ, சங்கராபுரம் 12 கிமீ, ரிஷிவந்தியம் 17 கிமீ, தியாகதுருகம் 17 கிமீ, திருக்கோவிலூர் 44 கிமீ, திருவண்ணாமலை 60 கிமீ
மூலவர்: முருகன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பாலப்பட்டு கிராமத்தில் பாவங்கள் போக்கி அருளும் கள்ளக்குறிச்சி பாலப்பட்டு முருகன் கோவில் அமைந்துள்ளது.
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவு அல்லது சங்கராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவு அல்லது ரிஷிவந்தியம் பேருந்து நிலையத்திலிருந்து 17 கிமீ தொலைவு அல்லது தியாகதுருகம் பேருந்து நிலையத்திலிருந்து 17 கிமீ தொலைவு அல்லது திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 44 கிமீ தொலைவு அல்லது திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து 60 கிமீ தொலைவு பிராயணம் செய்தால் பாலப்பட்டு முருகன் திருக்கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் முருகன் கையில் வேலுடன் வள்ளி, தெய்வானை சமேதராக பொலிவுடன் வீற்றிருந்து அருளாட்சி செய்கின்றார்.
கள்ளக்குறிச்சி பாலப்பட்டு முருகன் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருவிழா மிகவும் சிறப்பாக்க் கொண்டாடப்படுகின்றது. காவடி நேர்த்திக்க்டன் செலுத்துதல் இத்திருக்கோவிலின் சிறப்பம்சம் ஆகும். கந்த சஷ்டி திருவிழா தினசரி பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் முருகப்பெருமானின் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கள்ளக்குறிச்சி பாலப்பட்டு முருகன் சங்கராபுரம் வட்டாரத்தில் மிகவும் சிறப்பு மிக்க திருக்கோவிலாகும்..
தல அமைப்பு:
கள்ளக்குறிச்சி பாலப்பட்டு முருகன் கோவில் அழகிய அமைப்புடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் முருகன் கையில் வேலுடன் வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், அம்மன், நவக்கிரகங்கள் உல்லிட்ட அனைத்துத் தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.
.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
பாவங்கள் போக்க, மன அமைதி வேண்டி, விருப்பங்கள் நிறைவேற, திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் வேண்டி, குடும்ப ஒற்றுமை ஓங்க, உடல் நலன் வேண்டி, வினைகள் விலக, பிணிகள் விலக, தொழில் சிறக்க, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
மன அமைதி தந்தருளும் கள்ளக்குறிச்சி பாலப்பட்டு முருகனை மனமுருகி பிரார்த்திப்போம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
படம் 1 - 1849 பாவங்கள் போக்கியருளும் கள்ளக்குறிச்சி பாலப்பட்டு முருகன்
Comments
Post a Comment