கோவில் 1787 - கேரளா திருச்சூர் தெக்கும்கரா கோணத்துக்குன்னு குமரேஸ்வரர் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1787

பிணிகள் நீக்கும் கேரளா திருச்சூர் தெக்கும்கரா கோணத்துக்குன்னு குமரேஸ்வரர் கோவில்

30.04.2026 வியாழன்


அருள்மிகு கோணத்துக்குன்னு குமரேஸ்வரர் திருக்கோவில்

கோணத்துக்குன்னு [Konathukunnu]

தெக்கும்கரா 680682 [Thekkumkara]

புத்தன்சிரா [Puthenchira]

திருச்சூர் மாவட்டம் [Thrissur]

கேரளா மாநிலம் [Kerala]


இருப்பிடம்: திருச்சூர் 40 கிமீ, புத்தன்சிரா [Puthenchira] 2 கிமீ, தெக்கும்கரா [Thekkumkara] 5 கிமீ, கொடுங்களூர் 9 கிமீ, கொச்சி விமான நிலையம் 31 கிமீ, ஏர்ணாகுளம் 50 கிமீ, குருவாயூர் 52 கிமீ


மூலவர்: குமரேஸ்வரர்

உற்சவர்: குமரேஸ்வரர்


தல மகிமை:

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் தெக்கும்கரா கிராமத்தில் கோணத்துக்குன்னு பகுதியில் பிணிகள் நீக்கும் தெக்கும்கரா கோணத்துக்குன்னு குமரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.


திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 40 கிமீ தொலைவு அல்லது புத்தன்சிரா [Puthenchira] பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவு அல்லது தெக்கும்கரா [Thekkumkara] பேருந்து நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவு அல்லது கொடுங்களூர் பேருந்து நிலையத்திலிருந்து 9 கிமீ தொலைவு அல்லது கொச்சி விமான நிலையத்திலிருந்து 31 கிமீ தொலைவு அல்லது ஏர்ணாகுளம் பேருந்து நிலையத்திலிருந்து 50 கிமீ தொலைவு அல்லது குருவாயூர் பேருந்து நிலையத்திலிருந்து 52 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருச்சூர் தெக்கும்கரா கோணத்துக்குன்னு குமரேஸ்வரர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் குமரேஸ்வரர் கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி தந்து அருள்புரிகின்றார்.


திருச்சூர் தெக்கும்கரா கோணத்துக்குன்னு குமரேஸ்வரர் கோவிலில் தைப்பூசம் ஒவ்வொரு வருடமும் சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. காவடி ஆட்டம் இத்திருத்தலத்தில் முக்கிய நிகழ்வாகும். கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் முருகப்பெருமானின் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.


தல வரலாறு:

கேரள மாநிலம் திருச்சூர் தெக்கும்கரா கோணத்துக்குன்னு குமரேஸ்வரர் கோவில் இப்பகுதியில் அமைந்துள்ள முருகப்பெருமான் திருக்கோவிலாகும்.


தல அமைப்பு:

திருச்சூர் தெக்கும்கரா கோணத்துக்குன்னு குமரேஸ்வரர் கோவில் கேரளா பாணியில் அழகுற கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோவிலில் கொடிமரம். உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் குமரேஸ்வரர் கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் கணபதி, உற்சவர், ஐயப்பன், சிவபெருமான் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

பிணிகள் நீங்க, செல்வம் பெருக, விருப்பங்கள் நிறைவேற, குழந்தை வரம் வேண்டி, வினைகள் தீர, குடும்ப ஒற்றுமை ஓங்க, நோய்கள் குணமாக, நல்லன அருள, மன அமைதி பெற, பாவங்கள் போக்க, ஞானம் மேம்பட, தோஷங்கள் விலக

நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


செல்வம் பெருக அருளும் திருச்சூர் தெக்கும்கரா கோணத்துக்குன்னு குமரேஸ்வரரை கும்பிட்டு பணிந்திடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

🙏🏻🙏🏻


படம் 1 - 1787 பிணிகள் நீக்கும் கேரளா திருச்சூர் தெக்கும்கரா கோணத்துக்குன்னு குமரேஸ்வரர்


படம் 2 - 1787 செல்வம் பெருக அருளும் திருச்சூர் தெக்கும்கரா கோணத்துக்குன்னு குமரேஸ்வரர் கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 1102 - திருச்சி மணப்பாறை சென்னக்கல் குன்றம் சின்ன பழனி முருகன் கோவில்