கோவில் 1745 - திருப்பூர் மீனாட்சிவலசு சஞ்சீவி மலை முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1745
நோய்கள் தீர்க்கும் திருப்பூர் மீனாட்சிவலசு சஞ்சீவி மலை முருகன் கோவில்
19.03.2026 வியாழன்
அருள்மிகு சஞ்சீவி மலை முருகன் திருக்கோவில் [TM013879]
[அ/மி பாலசுப்பிரமணியன் முருகன் கோவில்]
மீனாட்சிவலசு 636106
கிளாங்குண்டல் வருவாய் கிராமம்
தாராபுரம் வட்டம்
திருப்பூர் மாவட்டம்
இருப்பிடம்: திருப்பூர் 70 கிமீ, வெள்ளக்கோவில் 25 கிமீ, தாராபுரம் 30 கிமீ, ஒட்டன்சத்திரம் 35 கிமீ
மூலவர்: சஞ்சீவி மலை முருகன்
உற்சவர்: சஞ்சீவி மலை முருகன்
தல மகிமை:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் மீனாட்சிவலசு கிராமத்தில் நோய்கள் தீர்க்கும் மீனாட்சிவலசு சஞ்சீவி மலை முருகன் கோவில் சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. இத்திருத்தலம் கிளாங்குண்டல் வருவாய் கிராமத்தில் உள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் மீனாட்சிவலசு சஞ்சீவி மலை முருகன் கோவில் திருப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 70 கிமீ தொலைவு அல்லது வெள்ளக்கோவில் பேருந்து நிலையத்திலிருந்து 25 கிமீ தொலைவு அல்லது தாராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 30 கிமீ தொலைவு அல்லது ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 35 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் மீனாட்சிவலசு சஞ்சீவி மலை முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சஞ்சீவி மலை முருகன் கையில் வேலுடன் அருள்பாலிக்கின்றார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் மீனாட்சிவலசு சஞ்சீவி மலை முருகன் கோவிலில் தைப்பூசம் ஒவ்வொரு வருடமும் முக்கியத் திருவிழாவாக சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் எல்லாத் திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை போன்ற நன்னாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் மீனாட்சிவலசுயில் மிகவும் பழமையான சஞ்சீவி மலை முருகன் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறை இத்திருக்கோவில் நிர்வாகத்தை தற்போது நிர்வகித்து வருகிறது.
தல அமைப்பு:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் மீனாட்சிவலசு சஞ்சீவி மலை முருகன் கோவில் அழகிய கோபுரத்துடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சஞ்சீவி மலை முருகன் கையில் வேலுடன் பொலிவுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர் உள்ளிட்ட தெய்வங்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
நோய்கள் தீர, மன மகிழ்ச்சி பெற, வேண்டியது நிறைவேற, வினைகள் விலக, சகல பிணிகள் போக்க, குழந்தை வரம் வேண்டி, நல்லன அருள, விவசாயம் விருத்தியடைய, இடர்கள் களைய, நேர்மறை எண்ணங்கள் உண்டாக, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
மன மகிழ்ச்சி தந்தருளும் திருப்பூர் மீனாட்சிவலசு சஞ்சீவி மலை முருகனை போற்றி பணிந்திடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
படம் 1 - 1745 நோய்கள் தீர்க்கும் திருப்பூர் மீனாட்சிவலசு சஞ்சீவி மலை முருகன்
Comments
Post a Comment