கோவில் 1744 - திருப்பூர் பெத்தப்பம்பட்டி தண்டாயுதபழனி சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1744
ஞானம் மேம்பட அருளும் திருப்பூர் பெத்தப்பம்பட்டி தண்டாயுதபழனி சுவாமி கோவில்
18.03.2026 புதன்
அருள்மிகு தண்டாயுதபழனி சுவாமி திருக்கோவில் [TM012901]
பெத்தப்பம்பட்டி 642205
உடுமலைப்பேட்டை வட்டம்
திருப்பூர் மாவட்டம்
இருப்பிடம்: திருப்பூர் 59 கிமீ, உடுமலைப்பேட்டை 12 கிமீ, செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில் 20 கிமீ, பொள்ளாச்சி 24 கிமீ, தாராபுரம் 35 கிமீ
மூலவர்: தண்டாயுதபழனி சுவாமி
தல மகிமை:
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் பெத்தப்பம்பட்டி கிராமத்தில் ஞானம் மேம்பட அருளும் பெத்தப்பம்பட்டி தண்டாயுதபழனி சுவாமி கோவில் அமைந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் பெத்தப்பம்பட்டி தண்டாயுதபழனி சுவாமி கோவில் திருப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 59 கிமீ தொலைவு அல்லது உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவு அல்லது மிகவும் பிரசித்திப் பெற்ற செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலிலிருந்து 20 கிமீ தொலைவு அல்லது பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து 24 கிமீ தொலைவு அல்லது தாராபுரம் 35 கிமீ பேருந்து நிலையத்திலிருந்து தொலைவு பிரயாணம் செய்தாலும் பெத்தப்பம்பட்டி தண்டாயுதபழனி சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் தண்டாயுதபழனி சுவாமி அருளாட்சி செய்கின்றார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் பெத்தப்பம்பட்டி தண்டாயுதபழனி சுவாமி கோவிலில் தைப்பூசம் திருவிழா விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் முருகப்பெருமானின் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் சிறப்பு வழிபாடுகள் உண்டு.
தல வரலாறு:
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் பெத்தப்பம்பட்டியில் மிகவும் பழமையான தண்டாயுதபழனி சுவாமி கோவில் உள்ளது. தற்போது இந்து அறநிலையத்துறை இத்திருக்கோவில் நிர்வாகத்தை நிர்வகித்து வருகிறது.
தல அமைப்பு:
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் பெத்தப்பம்பட்டி தண்டாயுதபழனி சுவாமி கோவில் கருவறையில் மூலவர் தண்டாயுதபழனி சுவாமி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், கிருஷ்ணமூர்த்தி சுவாமி (காவல் தெய்வம்) உள்ளிட்ட தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
ஞானம் மேம்பட, நல்லன அருள, கேட்டது கிடைக்க, வினைகள் விலக, பிணிகள் அகல, குழந்தைப்பேறு வேண்டி, உடல் ஆரோக்கியம் உண்டாக, துன்பங்கள் தீர, தோஷங்கள் போக்க
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6-8 மாலை 6-8
நல்லன அருளும் திருப்பூர் பெத்தப்பம்பட்டி தண்டாயுதபழனி சுவாமியை தாள் பணிந்து வேண்டிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
படம் 1 - 1744 ஞானம் மேம்பட அருளும் திருப்பூர் பெத்தப்பம்பட்டி தண்டாயுதபழனி சுவாமி கோவில்
Comments
Post a Comment