கோவில் 1726 - திருப்பூர் பாலமுருகன் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1726

சங்கடங்கள் யாவும் தீர்க்கும் திருப்பூர் பாலமுருகன் கோவில்

28.02.2026 சனி


அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில்

Sakthi Kovil Main Road

Bridge Way Colony Extension

திருப்பூர் 641607

திருப்பூர் மாவட்டம்


இருப்பிடம்: திருப்பூர் புதிய பேருந்து நிலையம் 3 கிமீ, திருப்பூர் பழைய பேருந்து நிலையம் 4 கிமீ அவிநாசி 14 கிமீ, பல்லடம் 17 கிமீ, காங்கேயம் 29 கிமீ


மூலவர்: பாலமுருகன்

உற்சவர்: பாலமுருகன்


தல மகிமை:

திருப்பூர் மாநகரம் மையத்தில் Bridge Way Colony Extension பகுதியில் சங்கடங்கள் யாவும் தீர்க்கும் திருப்பூர் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது.


திருப்பூர் பாலமுருகன் திருக்கோவில் திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவு அல்லது திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது அவிநாசி பேருந்து நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவு அல்லது பல்லடம் பேருந்து நிலையத்திலிருந்து 17 கிமீ தொலைவு அல்லது காங்கேயம் பேருந்து நிலையத்திலிருந்து 29 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருப்பூர் பாலமுருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் பாலமுருகன் அழகிய திருக்கோலத்தில் ஆற்றலுடன் அருள்பாலிக்கின்றார்.


திருப்பூர் பாலமுருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் மற்றும் கந்த சஷ்டி பெருவிழாவும் விமரிசையாக நடைபெறுகின்றன. மேலும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்துத் திருவிழாக்களும் சிறப்பு வழிபாடுகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை போன்ற நாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.


தல வரலாறு:

திருப்பூர் பாலமுருகன் கோவில் திருப்பூர் மாநரில் மிகவும் பிரசித்திப் பெற்ற திருக்கோவிலாகும்.

தல அமைப்பு:

திருப்பூர் பாலமுருகன் திருக்கோவில் கருவறையில் மூலவர் பாலமுருகன் கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு ஆற்றலுடன் அருள்பாலிக்கின்றார். மூலவர். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. கருவறை வாயிலில் விநாயகர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். மேலும் விநாயகர், சிவபெருமான், பார்வதி, மாரியம்மன், பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, சஷ்டி, கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி


பிரார்த்தனை:

சங்கடங்கள் தீர, நல்லன அருள, வினைகள் போக்க, பிணிகள் தீர, வேண்டுவன , கிட்ட, நோய்கள் குணமடைய, தொல்லைகள் அகல, கஷ்டங்கள் போக்கிட, தோஷங்கள் விலக

நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


நல்லன அருளும் திருப்பூர் பாலமுருகனை மனமுருகி வேண்டுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

🙏🏻🙏🏻


படம் 1 - 1726 சங்கடங்கள் யாவும் தீர்க்கும் திருப்பூர் பாலமுருகன்


படம் 2 - 1726 நல்லன அருளும் திருப்பூர் பாலமுருகன்
 

Comments