கோவில் 1718 - திருப்பூர் பெரியபட்டி தண்டாயுதசுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1718
துயரங்கள் தீர்க்கும் திருப்பூர் பெரியபட்டி தண்டாயுதசுவாமி கோவில்
20.02.2026 வெள்ளி
அருள்மிகு தண்டாயுதசுவாமி திருக்கோவில் [TM013392]
[அ/மி தண்டாயுத சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்]
பெரியபட்டி 642202
மடத்துக்குளம் வட்டம்
திருப்பூர் மாவட்டம்
இருப்பிடம்: திருப்பூர் 44 கிமீ, உடுமலைப்பேட்டை 21 கிமீ, பல்லடம் 27 கிமீ, மடத்துக்குளம் 32 கிமீ, பொள்ளாச்சி 39 கிமீ
மூலவர்: தண்டாயுதசுவாமி [தண்டாயுத சுப்பிரமணிய சுவாமி]
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: தண்டாயுதசுவாமி வள்ளி, தெய்வானை
தல மகிமை:
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் பெரியபட்டி கிராமத்தில் துயரங்கள் தீர்க்கும் பெரியபட்டி தண்டாயுதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தண்டாயுத சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
பெரியபட்டி தண்டாயுதசுவாமி திருக்கோவில் திருப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 44 கிமீ தொலைவு அல்லது உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவு அல்லது பல்லடம் பேருந்து நிலையத்திலிருந்து 27 கிமீ தொலைவு அல்லது மடத்துக்குளம் பேருந்து நிலையத்திலிருந்து 32 கிமீ தொலைவு அல்லது பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து 39 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் பெரியபட்டி தண்டாயுதசுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் தண்டாயுதசுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருளாட்சி புரிகின்றார்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் பெரியபட்டி தண்டாயுதசுவாமி கோவிலில் தைப்பூசம் முக்கியத் திருவிழாவாக நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் முருகப்பெருமானின் கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மாசி மகா சிவராத்திரி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
தல வரலாறு:
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் பெரியபட்டி தண்டாயுதசுவாமி கோவில் மிகவும் பிரசித்திப் பெற்றக் கோவிலாகும். பெரியபட்டி தண்டாயுதசுவாமி கோவில் நிர்வாகத்தை இந்து அறநிலையத் துறை தற்போது நிர்வகித்து வருகிறது.
தல அமைப்பு:
பெரியபட்டி தண்டாயுதசுவாமி கோவிலில் கருவறையில் மூலவர் தண்டாயுதசுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், சிவபெருமான் உள்ளிட்ட எல்லா தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
துயரங்கள் தீர, மன அமைதி தந்தருள, நினைத்தது நிறைவேற, வல்வினைகள் நீங்க, பிணிகள் விலக, திருமணம் நடைபெற, குழந்தைப்பேறு வேண்டி, உடல் ஆரோக்கியம் உண்டாக, நல்லன நடக்க, ஆனந்தம் பொங்க, விவசாயம் செழிக்க, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 7-11 மாலை 5-7
மன அமைதி தந்தருளும் திருப்பூர் பெரியபட்டி தண்டாயுதசுவாமி தாள் பணிந்து வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1718 துயரங்கள் தீர்க்கும் திருப்பூர் பெரியபட்டி தண்டாயுதசுவாமி [தண்டாயுத சுப்பிரமணிய சுவாமி]
Comments
Post a Comment