கோவில் 1717 - திருப்பூர் கானூர்புதூர் பழனி ஆண்டவர் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1717

ஞானம் மேம்பட அருளும் திருப்பூர் கானூர்புதூர் பழனி ஆண்டவர் கோவில்

19.02.2026 வியாழன்


அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவில்

கானூர்புதூர்

கண்ணூர் ஊராட்சி 641655

அவிநாசி வட்டம்

திருப்பூர் மாவட்டம்


இருப்பிடம்: திருப்பூர் 30 கிமீ, கண்ணூர் 3 கிமீ, சேவூர் 9 கிமீ, அவிநாசி 16 கிமீ, சேவூர் 9 கிமீ, அன்னூர் 18 கிமீ, மேட்டுப்பாளையம் 39 கிமீ, கோயம்புத்தூர் காந்திபுரம் 48 கிமீ


மூலவர்: பழனி ஆண்டவர்

உற்சவர்: பழனி ஆண்டவர்


தல மகிமை:

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் கண்ணூர் ஊராட்சி கானூர்புதூர் கிராமத்தில் ஞானம் மேம்பட அருளும் கானூர்புதூர் பழனி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது.


கானூர்புதூர் பழனி ஆண்டவர் திருக்கோவில் திருப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 30 கிமீ தொலைவு அல்லது கண்ணூர் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவு அல்லது சேவூர் பேருந்து நிலையத்திலிருந்து 9 கிமீ தொலைவு அல்லது அவிநாசி பேருந்து நிலையத்திலிருந்து 16 கிமீ தொலைவு அல்லது அன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவு அல்லது மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 39 கிமீ தொலைவு அல்லது கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 48 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கானூர்புதூர் பழனி ஆண்டவர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் பழனி ஆண்டவர் கையில் வேல் கொண்டு மயில் பின் நிற்க அருளாட்சி செய்கின்றார்.


திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் கானூர்புதூர் பழனி ஆண்டவர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூசம் சிறப்புப் பூஜைகளுடன் நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் முருகப்பெருமானின் கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் விசேஷ பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.


தல வரலாறு:

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் கானூர்புதூர் பழனி ஆண்டவர் கோவில் இப்பகுதியில் பிரசித்திப் பெற்றக் கோவிலாகும்.


தல அமைப்பு:

கானூர்புதூர் பழனி ஆண்டவர் கோவிலில் தீப ஸ்தம்பம் ஒன்று உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் பழனி ஆண்டவர் கையில் வேல் ஏந்தி மயில் பின் நிற்க நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர், சிவபெருமான், கருப்பண்ணசாமி, நவக்கிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

ஞானம் மேம்பட, எண்ணியது ஈடேற, இருவினைகள் விலக, பிணிகள் போக்க, புத்திரப்பேறு வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, நோய்கள் தீர, நல்லன அருள, மன மகிழ்ச்சி உண்டாக, துயரங்கள் அகல, தோஷங்கள் விலகிட


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


எண்ணியதை ஈடேற்றும் திருப்பூர் கானூர்புதூர் பழனி ஆண்டவரை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1717 ஞானம் மேம்பட அருளும் திருப்பூர் கானூர்புதூர் பழனி ஆண்டவர்


படம் 2 - 1717 எண்ணியதை ஈடேற்றும் திருப்பூர் கானூர்புதூர் பழனி ஆண்டவர்

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்