கோவில் 1716 - திருப்பூர் கரிச்சி அப்பியாபாளையம் குமாரசுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1716
செல்வங்கள் தரும் திருப்பூர் கரிச்சி அப்பியாபாளையம் குமாரசுவாமி கோவில்
18.02.2026 புதன்
அருள்மிகு கரிச்சி குமாரசுவாமி திருக்கோவில் [TM010203]
அப்பியாபாளையம் 638703
காங்கேயம் வட்டம்
திருப்பூர் மாவட்டம்
இருப்பிடம்: திருப்பூர் 32 கிமீ, காங்கேயம் 14 கிமீ, தாராபுரம் 23 கிமீ, பல்லடம் 30 கிமீ, வெள்ளக்கோவில் 32 கிமீ, அவிநாசி 47 கிமீ
மூலவர்: கரிச்சி குமாரசுவாமி
உற்சவர்: கரிச்சி குமாரசுவாமி
தல மகிமை:
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் அப்பியாபாளையம் கிராமத்தில் இகபர செல்வங்கள் தரும் அப்பியாபாளையம் கரிச்சி குமாரசுவாமி கோவில் அமைந்துள்ளது.
அப்பியாபாளையம் கரிச்சி குமாரசுவாமி திருக்கோவில் திருப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 32 கிமீ தொலைவு அல்லது காங்கேயம் பேருந்து நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவு அல்லது தாராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 23 கிமீ தொலைவு அல்லது பல்லடம் பேருந்து நிலையத்திலிருந்து 30 கிமீ தொலைவு அல்லது வெள்ளக்கோவில் பேருந்து நிலையத்திலிருந்து 32 கிமீ தொலைவு அல்லது அவிநாசி பேருந்து நிலையத்திலிருந்து 47 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் அப்பியாபாளையம் கரிச்சி குமாரசுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர்கரிச்சி குமாரசுவாமி கையில் தண்டம் ஏந்தி அருள்புரிகின்றார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் அப்பியாபாளையம் கரிச்சி குமாரசுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா வெகுச் சிறப்பாக நடைபெறுகின்றது. கந்த சஷ்டி திருவிழா தினசரி அபிஷேகம், அலங்காரம், சிறப்புப் தீபாரதனைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமான் அனைத்துத் திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் விசேஷ பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் அப்பியாபாளையம் கரிச்சி குமாரசுவாமி கோவில் மிகவம் பழமையான திருக்கோவிலாகும். இத்திருக்கோவில் நிர்வாகத்தை தற்போது இந்து அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது.
தல அமைப்பு:
அப்பியாபாளையம் கரிச்சி குமாரசுவாமி கோவில் கோபுரங்கள், சிற்பங்கள் அழகுற அமைந்துள்ளன. கோவிலில் அழகிய தீப ஸ்தம்பம் ஒன்று உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் கரிச்சி குமாரசுவாமி கையில் தண்டம் ஏந்தி நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, உற்சவர், சிவபெருமான், கருப்பண்ணசாமி, நவக்கிரகங்கள் உள்ளிட்ட எல்லா தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
செல்வங்கள் தர, தீவினைகள் தீர, வேண்டுவன கிடைக்க, பிணிகள் விலக, குழந்தை பாக்கியம் வேண்டி, குடும்ப ஒற்றுமை ஓங்க, நோய்கள் குணமடைய, நல்லன நடைபெற, மன அமைதி கிட்ட, இடர்பாடுகள் களைய, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
தீவினைகள் தீர்க்கும் திருப்பூர் கரிச்சி அப்பியாபாளையம் குமாரசுவாமி திருவடிகள் பணிந்து தொழுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1716 செல்வங்கள் தரும் திருப்பூர் கரிச்சி அப்பியாபாளையம் குமாரசுவாமி
Comments
Post a Comment