கோவில் 1713 - திருப்பூர் புத்தூர் பள்ளபாளையம் பழனி ஆண்டவர் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1713

நல்லன அருளும் திருப்பூர் புத்தூர் பள்ளபாளையம் பழனி ஆண்டவர் கோவில்

15.02.2026 ஞாயிறு


அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவில்

புத்தூர் பள்ளபாளையம் 638751

ஊத்துக்குளி வட்டம்

திருப்பூர் மாவட்டம்


இருப்பிடம்: திருப்பூர் 20 கிமீ, ஊத்துக்குளி 6 கிமீ, பெருந்துறை 17 கிமீ, அவிநாசி 28 கிமீ, காங்கேயம் 28 கிமீ, பல்லடம் 35 கிமீ, ஈரோடு 36 கிமீ


மூலவர்: பழனி ஆண்டவர்

உற்சவர்: பழனி ஆண்டவர்


தல மகிமை:

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் புத்தூர் பள்ளபாளையம் கிராமத்தில் நல்லன அருளும் புத்தூர் பள்ளபாளையம் பழனி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் திருப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவு அல்லது ஊத்துக்குளி பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது பெருந்துறை பேருந்து நிலையத்திலிருந்து 17 கிமீ தொலைவு அல்லது அவிநாசி பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவு அல்லது காங்கேயம் பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவு அல்லது பல்லடம் பேருந்து நிலையத்திலிருந்து 35 கிமீ தொலைவு அல்லது ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து 36 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் புத்தூர் பள்ளபாளையம் பழனி ஆண்டவர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் பழனி ஆண்டவர் கையில் தண்டம் ஏந்தி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கின்றார்.


திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் புத்தூர் பள்ளபாளையம் பழனி ஆண்டவர் கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூசம் முக்கியத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி திருவிழாவும் சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட முருகப்பெருமான் அனைத்துத் திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.


தல வரலாறு:

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் புத்தூர் பள்ளபாளையம் பழனி ஆண்டவர் கோவில் இப்பகுதியில் பிரசித்திப் பெற்றக் கோவிலாகும்.

தல அமைப்பு:

புத்தூர் பள்ளபாளையம் பழனி ஆண்டவர் கோவில் வாயிலின் வேல்கள் மற்றும் தீபஸ்தம்பம் உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் பழனி ஆண்டவர் கையில் தண்டம் ஏந்திய படி நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர் உள்ளிட்ட எல்லா தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், விநாயகர் சதுர்த்தி, சஷ்டி, கிருத்திகை,


பிரார்த்தனை:

நல்லன அருள, துயரங்கள் களைய, கேட்டது கிடைக்க, இரு வினைகள் நீங்க, பிணிகள் தீர, குழந்தை வரம் வேண்டி, நோய்கள் குணமடைய, மன மகிழ்ச்சி உண்டாக, தோஷங்கள் அகல


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


துயரங்கள் களையும் திருப்பூர் புத்தூர் பள்ளபாளையம் பழனி ஆண்டவரை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1713 நல்லன அருளும் திருப்பூர் புத்தூர் பள்ளபாளையம் பழனி ஆண்டவர்


படம் 2 - 1713 துயரங்கள் களையும் திருப்பூர் புத்தூர் பள்ளபாளையம் பழனி ஆண்டவர் கோவில்
 

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்