கோவில் 1712 - திருப்பூர் பொம்மநாயக்கண்பாளையம் பழனி ஆண்டவர் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1712

தெய்வீக உணர்வுகளை தந்தருளும் திருப்பூர் பொம்மநாயக்கண்பாளையம் பழனி ஆண்டவர் கோவில்

14.02.2026 சனி


அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவில்

பொம்மநாயக்கண்பாளையம் 641602

திருப்பூர் வட்டம்

திருப்பூர் மாவட்டம்


இருப்பிடம்: திருப்பூர் 8 கிமீ, ஊத்துக்குளி 13 கிமீ, அவிநாசி 14 கிமீ, பல்லடம் 24 கிமீ


மூலவர்: பழனி ஆண்டவர்

உற்சவர்: பழனி ஆண்டவர்


தல மகிமை:

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வட்டம் பொம்மநாயக்கண்பாளையம் கிராமத்தில் தெய்வீக உணர்வுகளை தந்தருளும் பொம்மநாயக்கண்பாளையம் பழனி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் திருப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது ஊத்துக்குளி பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது அவிநாசி பேருந்து நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவு அல்லது பல்லடம் பேருந்து நிலையத்திலிருந்து 24 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் பொம்மநாயக்கண்பாளையம் பழனி ஆண்டவர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் பழனி ஆண்டவர் கையில் தண்டம் ஏந்தி கருணை பொங்க அருளாட்சி செய்கின்றார்.


திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வட்டம் பொம்மநாயக்கண்பாளையம் பழனி ஆண்டவர் கோவிலில் தைப்பூசம் முக்கியத் திருவிழாவாக சிறப்புப் பூஜைகள், காவடி என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி திருவிழா தினமும் பூஜைகள், 6-ம் நாள் சூரசம்ஹாரம் என விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட முருகப்பெருமான் அனைத்துத் திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.


தல வரலாறு:

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வட்டம் பொம்மநாயக்கண்பாளையம் பழனி ஆண்டவர் கோவில் இப்பகுதியில் மிகவும் சிறப்புப் பெற்றக் கோவிலாகும்.

தல அமைப்பு:

பொம்மநாயக்கண்பாளையம் பழனி ஆண்டவர் கோவில் அழகுற அமைந்துள்ளது.. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் பழனி ஆண்டவர் தண்டமேந்தி கருணையே வடிவமாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் செல்வ விநாயகர், உற்சவர், சிவபெருமான், உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், விநாயகர் சதுர்த்தி, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

தெய்வீக உணர்வுகள் பெற்றிட, சங்கடங்கள் தீர, வேண்டுவன கிடைக்க, வினைகள் போக்க, சகல பிணிகள் விலக, குழந்தை பாக்கியம் வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, உடல் ஆரோக்கியம் உண்டாக, நல்லவை நடக்க, மன தைரியம் கிட்ட, ஆனந்தம் பொங்க, தோஷங்கள் விலக


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


சங்கடங்கள் தீர்க்கும் திருப்பூர் பொம்மநாயக்கண்பாளையம் பழனி ஆண்டவர் திருவடி பணிந்து தொழுதிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1712 தெய்வீக உணர்வுகளை தந்தருளும் திருப்பூர் பொம்மநாயக்கண்பாளையம் பழனி ஆண்டவர்


படம் 2 - 1712 சங்கடங்கள் தீர்க்கும் திருப்பூர் பொம்மநாயக்கண்பாளையம் பழனி ஆண்டவர்

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்