கோவில் 1695 - மலேசியா சிலாங்கூர் கோலா சிலாங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1695

மன மகிழ்ச்சி தரும் மலேசியா சிலாங்கூர் கோலா சிலாங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

28.01.2026 புதன்


அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

45000 கோலா சிலாங்கூர் [Kuala Selangor]

கோலா சிலாங்கூர் மாவட்டம் [Kuala Selangor District]

சிலாங்கூர் மாநிலம் [Selangor State]

மலேசியா [Malaysia]


இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 63 கிமீ, கோலா சிலாங்கூர் [Kuala Selangor] 4 கிமீ, புக்கிட் பிளிம்பிங் [Bukit Belimbing] 12 கிமீ, தஞ்சோங் காராங் [Tanjung Karang] 18 கிமீ, பெஸ்தாரி ஜெயா [Bestari Jaya] 21 கிமீ, புஞ்சாக் ஆலாம் [Puncak Alam] 24 கிமீ, ரவாங் [Rawang] 42 கிமீ, சா ஆலாம் [Shah Alam] 55 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை

உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை

பழமை: 100 ஆண்டுகளுக்கும் மேல்


தல மகிமை:

மலேசியா நாட்டில் மேற்கே அமைந்துள்ள சிலாங்கூர் மாநிலம் [Selangor State] கோலா சிலாங்கூர் மாவட்டம் [Kuala Selangor District] தலைநகரம் கோலா சிலாங்கூர் [Kuala Selangor] நகரில் மன மகிழ்ச்சி தரும் கோலா சிலாங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் கோலா சிலாங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் 100 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள பழமையான கோவில் ஆகும்.

இத்திருக்கோவில் கோலாலம்பூர் [Kuala Lumpur] பேருந்து நிலையத்திலிருந்து 63 கிமீ தொலைவு அல்லது கோலா சிலாங்கூர் [Kuala Selangor] பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது புக்கிட் பிளிம்பிங் [Bukit Belimbing] பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவு அல்லது தஞ்சோங் காராங் [Tanjung Karang] பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவு அல்லது பெஸ்தாரி ஜெயா [Bestari Jaya] பேருந்து நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவு அல்லது புஞ்சாக் ஆலாம் [Puncak Alam] பேருந்து நிலையத்திலிருந்து 24 கிமீ தொலைவு அல்லது ரவாங் [Rawang] பேருந்து நிலையத்திலிருந்து 42 கிமீ தொலைவு அல்லது சா ஆலாம் [Shah Alam] 55 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோலா சிலாங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் வள்ளி, தெய்வானை சமேதராக அருளாட்சி செய்கின்றார்.

மலேசியா சிலாங்கூர் மாநிலம் கோலா சிலாங்கூர் மாவட்டம் கோலா சிலாங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூசத் திருவிழா 11 நாட்கள் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்புப் பூஜைகள் என கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது. ஏராளமான பக்தர்கள் காவடி ஏந்தி வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். ரதோற்சவம் மிக முக்கிய நிகழ்வாகும். கந்த சஷ்டி திருவிழா 6 நாட்கள் வெகுச் சிறப்பாக நடைபெறுகின்றது. ஆறாம் நாள் மாலை ஏராள மக்கள் முன்னிலையில் சூரசம்ஹாரம் மிகச் சிறப்பாக நடைபெறும். மேலும் இத்திருக்கோவிலில் முருகப்பெருமானுக்கு பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை முதலான நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, உள்ளிட்ட அனைத்து இந்து பண்டிகைகளும் சிறப்புப் பூஜைகளுடன் நடைபெறுகின்றன.


தல வரலாறு:

மலேசியா சிலாங்கூர் மாநிலம் கோலா சிலாங்கூர் மாவட்டம் கோலா சிலாங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இங்குள்ள தமிழர்களால் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மிகப் பழமையான் கோவிலாகும்.


தல அமைப்பு:

மலேசியா சிலாங்கூர் மாநிலம் கோலா சிலாங்கூர் மாவட்டம் கோலா சிலாங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கோபுரங்கள், சிற்பங்கள் அழகுற அமைந்துள்ளன. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேல் ஏந்தி வள்ளி, தெய்வானை சமேதராக கருணை பொங்க பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர், மாரியம்மன், உள்ளிட்ட எல்லாத் தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், சித்ரா பௌர்ணமி, திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

மன மகிழ்ச்சி பெற, திருமணத்தடை அகல, குழந்தை பாக்கியம் வேண்டி, கேட்டது கிடைக்க, குடும்ப வாழ்வு சிறக்க, வினைகள் தீர, பிணிகள் போக்க, நோய்கள் குணமடைய, இடர்கள் களைய, தொழில், வியாபாரம் மேம்பட, தோஷங்கள் நீங்க


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 7-11 மாலை 7-9.30


திருமணத்தடை அகற்றும் மலேசியா சிலாங்கூர் கோலா சிலாங்கூர் சுப்பிரமணிய சுவாமியை பணிந்து வேண்டுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1695 மன மகிழ்ச்சி தரும் மலேசியா சிலாங்கூர் கோலா சிலாங்கூர் சுப்பிரமணிய சுவாமி


படம் 2 - 1695 திருமணத்தடை அகற்றும் மலேசியா சிலாங்கூர் கோலா சிலாங்கூர் சுப்பிரமணிய சுவாமி

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்