கோவில் 1693 - மலேசியா சிலாங்கூர் பெஸ்தாரி ஜெயா [பத்தாங் பெர்ஜுந்தை] தண்டாயுதபாணி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1693
ஞானம் மேம்பட அருளும் மலேசியா சிலாங்கூர் பெஸ்தாரி ஜெயா [பத்தாங் பெர்ஜுந்தை] தண்டாயுதபாணி கோவில்
26.01.2026 திங்கள்
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில்
45600 பெஸ்தாரி ஜெயா [பத்தாங் பெர்ஜுந்தை] [Bestari Jaya]
கோலா சிலாங்கூர் மாவட்டம் [Kuala Selangor District]
சிலாங்கூர் மாநிலம் [Selangor State]
மலேசியா [Malaysia]
இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 58 கிமீ, ரவாங் [Rawang] 15 கிமீ, கோலா சிலாங்கூர் [Kuala Selangor] 21 கிமீ, சுங்கை பூலோ [Sungai Buloh] 33 கிமீ, சா ஆலாம் [Shah Alam] 56 கிமீ, புத்ராஜெயா [Putrajaya] 78 கிமீ
மூலவர்: தண்டாயுதபாணி
உற்சவர்: தண்டாயுதபாணி
தல மகிமை:
மலேசியா நாட்டில் மேற்கே அமைந்துள்ள சிலாங்கூர் மாநிலம் [Selangor State] கோலா சிலாங்கூர் மாவட்டம் [Hulu Langat District] பெஸ்தாரி ஜெயா [பத்தாங் பெர்ஜுந்தை] [Bestari Jaya] நகரில் ஞானம் மேம்பட அருளும் பெஸ்தாரி ஜெயா [பத்தாங் பெர்ஜுந்தை] தண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. பத்தாங் பெர்ஜுந்தை நகரம் தற்போது பெஸ்தாரி ஜெயா என்று அழைக்கப்படுகின்றது.
இத்திருக்கோவில் கோலாலம்பூர் [Kuala Lumpur] பேருந்து நிலையத்திலிருந்து 58 கிமீ தொலைவு அல்லது ரவாங் [Rawang] பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது கோலா சிலாங்கூர் [Kuala Selangor] பேருந்து நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவு அல்லது சுங்கை பூலோ [Sungai Buloh] பேருந்து நிலையத்திலிருந்து 33 கிமீ தொலைவு அல்லது சா ஆலாம் [Shah Alam] 56 கிமீ, புத்ராஜெயா [Putrajaya] [Hulu Langat] 78 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் பெஸ்தாரி ஜெயா [பத்தாங் பெர்ஜுந்தை] தண்டாயுதபாணி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் தண்டாயுதபாணி கையில் தண்டம் ஏந்தி அருள்புரிகின்றார்.
மலேசியா சிலாங்கூர் மாநிலம் கோலா சிலாங்கூர் மாவட்டம் பெஸ்தாரி ஜெயா [பத்தாங் பெர்ஜுந்தை] தண்டாயுதபாணி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுகின்றது. கந்த சஷ்டி பெருவிழா 7 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகின்றது. ஆறாம் நாள் சூரசம்ஹார வதமும், 7-ம் நாள் திருக்கல்யாணம் நிகழ்வது இத்திருக்கோவிலின் சிறப்பம்சமாகும். மேலும் இத்திருக்கோவிலில் முருகப்பெருமானுக்கு தைப்பூசம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, மாசி மகம் உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை முதலான நன்னாநாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, உள்ளிட்ட அனைத்து இந்து பண்டிகைகளும் சிறப்புப் பூஜைகளுடன் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
மலேசியா சிலாங்கூர் மாநிலம் கோலா சிலாங்கூர் மாவட்டம் பெஸ்தாரி ஜெயா [பத்தாங் பெர்ஜுந்தை] தண்டாயுதபாணி கோவில் இங்குள்ள தமிழர்களால் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் சிறிய ஆலயமாக எழுப்பி முருகப்பெருமானை வழிபட்டு வந்தனர். 1955-ல் முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மீண்டும் 10.04.1989-ல் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மீண்டும் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 27.05.2001-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தல அமைப்பு:
மலேசியா சிலாங்கூர் மாநிலம் கோலா சிலாங்கூர் மாவட்டம் பெஸ்தாரி ஜெயா [பத்தாங் பெர்ஜுந்தை] தண்டாயுதபாணி கோவிலில் அழகிய ராஜகோபுரம் அமைந்துள்ளது. கோவிலில் கோபுரங்கள், சிற்பங்கள் அழகுற அமைந்துள்ளன. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் தண்டாயுதபாணி கையில தண்டம் ஏந்தி பொலிவான தோற்றத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மகா கணபதி, உற்சவர், மகா மாரியம்மன் உள்ளிட்ட எல்லா தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம், சித்ரா பௌர்ணமி, திருக்கார்த்திகை, மாசி மகம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
ஞானம் மேம்பட அருள, விருப்பங்கள் நிறைவேற, வினைகள் விலக, பிணிகள் தீர, குழந்தை பாக்கியம் வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, நோய்கள் குணமடைய, நல்லன அருள, மன நிம்மதி உண்டாக, இடர்கள் களைய, சகல தோஷங்களும் அகல
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6-9 மாலை 6-9
விருப்பங்களை நிறைவேற்றி தரும் மலேசியா சிலாங்கூர் பெஸ்தாரி ஜெயா [பத்தாங் பெர்ஜுந்தை] தண்டாயுதபாணியை போற்றி வணங்கிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1693 ஞானம் மேம்பட அருளும் மலேசியா சிலாங்கூர் பெஸ்தாரி ஜெயா [பத்தாங் பெர்ஜூந்தை] தண்டாயுதபாணி
Comments
Post a Comment