கோவில் 1667 - மலேசியா பினாங்கு சுங்கை ஆரா சுப்பிரமணியர் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1667

நல்லன அருளும் மலேசியா பினாங்கு சுங்கை ஆரா சுப்பிரமணியர் கோவில்

31.12.2025 புதன்


அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோவில்

11900 சுங்கை ஆரா [Sungai Ara]

Bayan Lepas அருகில்

தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம் [Southwest Penang Island District]

பினாங்கு மாநிலம் [Penang State]

மலேசியா [Malaysia]


இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 351 கிமீ, பாயான் லெப்பாஸ் [Bayan Lepas] 2 கிமீ, பினாங்கு பன்னாட்டு விமான நிலையம் [Pinang International Airport] 6 கிமீ, பினாங்கு/ஜார்ஜ் டவுண் [Penang] 16 கிமீ, பிறை [Perai] 21 கிமீ, பத்து கவான் [Batu Kawan] 32 கிமீ, பட்டர்வொர்த் [Butterworth] 33 கிமீ, சிம்பாங் அம்பாட் [Simpang Ampat] 35 கிமீ


மூலவர்: சுப்பிரமணியர்

உற்சவர்: சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை


தல மகிமை:

மலேசியா நாட்டில் பினாங்கு மாநிலம் தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டத்தில் உள்ள சுங்கை ஆரா [Sungai Ara] நகரில் நல்லன அருளும் சுங்கை ஆரா சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் மிகவும் பிரசித்திப் பெற்ற முனீஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும்.

இத்திருக்கோவில் கோலாலம்பூர் [Kuala Lumpur] பேருந்து நிலையத்திலிருந்து 351 கிமீ தொலைவு அல்லது பாயான் லெப்பாஸ் [Bayan Lepas] பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவு அல்லது பினாங்கு பன்னாட்டு விமான நிலையம் [Pinang International Airport] பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது பினாங்கு/ஜார்ஜ் டவுண் [Penang] பேருந்து நிலையத்திலிருந்து 16 கிமீ தொலைவு அல்லது பிறை [Perai] பேருந்து நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவு அல்லது பத்து கவான் [Batu Kawan] பேருந்து நிலையத்திலிருந்து 32 கிமீ தொலைவு அல்லது பட்டர்வொர்த் [Butterworth] பேருந்து நிலையத்திலிருந்து 33 கிமீ தொலைவு அல்லது சிம்பாங் அம்பாட் [Simpang Ampat] பேருந்து நிலையத்திலிருந்து 35 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சுங்கை ஆரா சுப்பிரமணியர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணியர் கையில் வேலுடன் மயில் பின் நிற்க நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.


மலேசியா பினாங்கு மாநிலம் தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம் சுங்கை ஆரா சுப்பிரமணியர் கோவிலில் தைப்பூசத் திருவிழா ஆண்டு தோறும் சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. மற்ற மலேசிய முருகன் கோவில்களை போலவே கந்த சஷ்டி பெருவிழா சிறப்புடன் கொண்டாடப்படுகின்றது. சூரசம்ஹாரம் மற்றும் பெருமான் திருக்கல்யாணம் இவ்விழாவில் முக்கிய நிகழ்வுகளாகும். மேலும் இத்திருக்கோவிலில் சுப்பிரமணியரின் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கிருத்திகை, சித்ரா பௌர்ணமி, மாசி மகம் உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் சிறப்புடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம் நன்னாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, நவராத்திரி உள்ளிட்ட அனைத்து இந்து பண்டிகைகளும் விசேஷ பூஜைகளுடன் நடக்கின்றன.


தல வரலாறு:

மலேசியா பினாங்கு மாநிலம் தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம் சுங்கை ஆரா சுப்பிரமணியர் கோவில் தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான முருகப்பெருமான் திருக்கோவிலாகும்.


தல அமைப்பு:

மலேசியா பினாங்கு மாநிலம் தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம் சுங்கை ஆரா சுப்பிரமணியர் கோவில் அழகிய அமைப்புடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணியர் கையில் வேலுடன் மயில் பின் நிற்க நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சியருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் அழகிய கொடிமரம், மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர், கோஷ்ட தெய்வங்கள், சிவபெருமான், இடும்பன், முனீஸ்வரர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட எல்லாத் தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சித்ரா பௌர்ணமி, மாசி மகம், விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, நவராத்திரி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

நல்லன அருள, செல்வ வளம் பெருக, நினைத்தது நிறைவேற, பழ வினைகள் குறைய, சகல பிணிகள் விலக, குழந்தைப்பேறு வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, உடல் ஆரோக்கியம் உண்டாக, கல்வி சிறக்க, தொழில் மேம்பட, துயரங்கள் நீங்க, தோஷங்கள் போக்க


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6.30-9 மாலை 6-9


செல்வ வளம் பெருக்கும் மலேசியா பினாங்கு சுங்கை ஆரா சுப்பிரமணியரை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1667 நல்லன அருளும் மலேசியா பினாங்கு சுங்கை ஆரா சுப்பிரமணியர்


படம் 2 - 1667 செல்வ வளம் பெருக்கும் மலேசியா பினாங்கு சுங்கை ஆரா சுப்பிரமணியர்

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்