கோவில் 1666 - மலேசியா பினாங்கு பட்டர்வொர்த் மாக் மண்டின் திருமுருகன் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1666

கேட்ட வரங்களை வழங்கும் மலேசியா பினாங்கு பட்டர்வொர்த் மாக் மண்டின் திருமுருகன் கோவில்

30.12.2025 செவ்வாய்


அருள்மிகு திருமுருகன் திருக்கோவில்

1050 மாக் மண்டின் [Mak Mandin]

13400 பட்டர்வொர்த் [Butterworth]

வட செபராங் பிறை மாவட்டம் [North Seberang Perai District]

பினாங்கு மாநிலம் [Penang State]

மலேசியா [Malaysia]


இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 344 கிமீ, பட்டர்வொர்த் [Butterworth] 2 கிமீ, பிறை [Perai] 8 கிமீ, சிம்பாங் அம்பாட் [Simpang Ampat] 26 கிமீ, பினாங்கு/ஜார்ஜ் டவுண் [Penang] 27 கிமீ, பத்து கவான் [Batu Kawan] 30 கிமீ, வால்டோர் [Val d'Or] 31 கிமீ, சுங்கை ஜாவி [Sungai Jawi] 37 கிமீ


மூலவர்: திருமுருகன்

தேவியர்: வள்ளி, தெய்வானை

உற்சவர்: சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை

தோற்றம்: 1974

கும்பாபிஷேகம்: 29.08.2025


தல மகிமை:

மலேசியா நாட்டில் பினாங்கு மாநிலம் வட செபராங் பிறை மாவட்டத்தில் உள்ள பட்டர்வொர்த் [Butterworth] நகருக்கு அருகில் மாக் மண்டின் [Mak Mandin] நகரில் கேட்ட வரங்களை வழங்கும் பட்டர்வொர்த் மாக் மண்டின் திருமுருகன் கோவில் அமைந்துள்ளது.

இத்திருக்கோவில் கோலாலம்பூர் [Kuala Lumpur] பேருந்து நிலையத்திலிருந்து 344 கிமீ தொலைவு அல்லது பட்டர்வொர்த் [Butterworth] பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவு அல்லது பிறை [Perai] பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது சிம்பாங் அம்பாட் [Simpang Ampat] பேருந்து நிலையத்திலிருந்து 26 கிமீ தொலைவு அல்லது பினாங்கு//ஜார்ஜ் டவுண் [Penang] பேருந்து நிலையத்திலிருந்து 27 கிமீ தொலைவு அல்லது பத்து கவான் [Batu Kawan] பேருந்து நிலையத்திலிருந்து 30 கிமீ தொலைவு அல்லது வால்டோர் [Val d'Or] பேருந்து நிலையத்திலிருந்து 31 கிமீ தொலைவு அல்லது சுங்கை ஜாவி [Sungai Jawi] பேருந்து நிலையத்திலிருந்து 37 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் பட்டர்வொர்த் மாக் மண்டின் திருமுருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் திருமுருகன் ஆறுமுகங்களோடு மயில் மீதமர்ந்து வள்ளி, தெய்வானை சமேதராக அருளாட்சி புரிகின்றார். மலேசியாவில் ஒரு சில கோவில்களில்தான் முருகப்பெருமான் ஆறு திருமுகங்கள் மற்றும் பன்னிரு திருக்கரங்களுடன் அருள்புரிகின்றார்.


மலேசியா பினாங்கு மாநிலம் வட செபராங் பிறை மாவட்டம் பட்டர்வொர்த் மாக் மண்டின் திருமுருகன் கோவிலில் 1976-ல் முதல் முறையாக மாசி மக உற்சவம் கொண்டாடப்பட்டது. கந்த சஷ்டி திருவிழா 9 நாட்கள் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது. தினமும் திருமுருகனுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்புத் தீபாராதனை வெகு விமரிசையாக நடைபெறுகின்றது. ஆறாம் நாள் மாலை சூரசம்ஹாரம் சிறப்புற நடக்கின்றது. ஏழாம் நாள் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் வெகுச் சிறப்பாக நடைபெறுகின்றது. தொடர்ந்து அன்னதானம் ந்டைபெறுகின்றது. அதிக அளவில் பக்தர்கள் விரதமிருந்து சுப்பிரமணிய பெருமானை வழிபட்டு நற்பலன்கள் பெற்று செல்கின்றனர். 8-ம் நாளில் ரதோற்சவம் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பம்சமாகும். தைப்பூசம் மிக விமரிசையாக ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி சுமந்து செல்கின்றனர். அன்னதானம் பிரமாண்டாமாக நடைபெறுகின்றது. ஆடிக்கிருத்திகை திருநாளில் சண்முகார்ச்சனை நடைபெறுவது இத்திருக்கோவிலின் சிறப்பம்சமாகும். மேலும் முருகப்பெருமானின் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, மாசி மகம் உள்ளிட்ட எல்லா திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் சிறப்புடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம் நன்னாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, நவராத்திரி உள்ளிட்ட அனைத்து இந்து பண்டிகைகளும் விசேஷ பூஜைகளுடன் நடக்கின்றன.


தல வரலாறு:

மலேசியா பினாங்கு மாநிலம் வட செபராங் பிறை மாவட்டம் பட்டர்வொர்த் மாக் மண்டின் திருமுருகன் கோவில் 20.09.1974 வெள்ளிக்கிழமை ஒன்பது அன்பர்களால் தோற்றுவிக்கப்பட்டது. தொடர்ந்து 05.10.1974 சனிக்கிழமையன்று பூர்வாங்க கட்டுமான வேலைகள் ஆரம்பமானது. 1975-ல் முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 16.02.196 அன்று முதல் முறையாக மாசி மக உற்சவம் கொண்டாடப்பட்டது. இதுவே இத்திருக்கோவிலின் முதலாவது உற்சவமாகும். 1989-ல் கோவில் திருப்பணி வேலைகள் முடிவுற்று 11.12.1989-ல் இரண்டாவது கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. புதிய இடத்தில் திருக்கோவில் கட்டப்பட்டு 24.03.1997-ல் மூன்றாவது கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது. 2025 -ல் திருக்கோவில் திருப்பணிகள் முடிவுற்று, ஆறு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று 29.08.2025 வெள்ளிக்கிழமையன்று கும்பாபிஷேகம் ஆகம முறைகளின் படி நடைபெற்றது.


தல அமைப்பு:

மலேசியா பினாங்கு மாநிலம் வட செபராங் பிறை மாவட்டம் பட்டர்வொர்த் மாக் மண்டின் திருமுருகன் கோவிலில் அழகிய கோபுரங்கள், பொலிவான சிற்பங்கள் உள்ளது. அழகிய கொடிமரம் உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் திருமுருகன் ஆறு முகங்கள், பன்னிரெண்டு திருக்கரங்களுடன் மயில் மீதமர்ந்த கோலத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், சிவபெருமான், இடும்பன், பைரவர், நவக்கிரகங்கள் உட்பட அனைத்துத் தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

கந்த சஷ்டி, மாசி மகம், தைப்பூசம், ஆடிக்கிருத்திகை, சித்ரா பௌர்ணமி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, நவராத்திரி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

கேட்ட வரங்களை வழங்க, இடர்கள் களைய, நல்ல எண்ணங்கள் உண்டாக, வினைகள் விலக, பிணிகள் போக்க, திருமணத்தடை நீங்க, புத்திரப் பேறு வேண்டி, குடும்ப ஒற்றுமை ஓங்க, தீராத நோய்கள் தீர, தொழில், வியாபாரம் விருத்தியடைய, தோஷங்கள் அகல


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6-11 மாலை 6-9


இடர்கள் களைய அருளும் மலேசியா பினாங்கு பட்டர்வொர்த் மாக் மண்டின் திருமுருகனை மனமுருகி தொழுதிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1666 கேட்ட வரங்களை வழங்கும் மலேசியா பினாங்கு பட்டர்வொர்த் மாக் மண்டின் திருமுருகன்



படம் 2 - 1666 இடர்கள் களைய அருளும் மலேசியா பினாங்கு பட்டர்வொர்த் மாக் மண்டின் திருமுருகன்

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்