கோவில் 1664 - மலேசியா பினாங்கு நிபோங் திபால் திருத்தணி கல்யாண முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1664
மன மகிழ்ச்சி தந்தருளும் மலேசியா பினாங்கு நிபோங் திபால் திருத்தணி கல்யாண முருகன் கோவில்
28.12.2025 ஞாயிறு
அருள்மிகு திருத்தணி கல்யாண முருகன் திருக்கோவில்
14300 நிபோங் திபால் [Nibong Tebal]
தெற்கு செபராங் பிறை மாவட்டம் [South Seberang Perai District]
பினாங்கு மாநிலம் [Penang State]
மலேசியா [Malaysia]
இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 316 கிமீ, சுங்கை ஜாவி [Sungai Jawi] 4 கிமீ, வால்டோர் [Val d'Or] 10 கிமீ, பினாங்கு/ஜார்ஜ் டவுண் [Penang] 15 கிமீ, சிம்பாங் அம்பாட் [Simpang Ampat] 20 கிமீ, பத்து கவான் [Batu Kawan] 23 கிமீ, பிறை [Perai] 30 கிமீ
மூலவர்: திருத்தணி கல்யாண முருகன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: திருத்தணி கல்யாண முருகன் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
மலேசியா நாட்டில் பினாங்கு மாநிலம் தெற்கு செபராங் பிறை மாவட்டத்தில் உள்ள நிபோங் திபால் [Nibong Tebal] நகரில் மன மகிழ்ச்சி தந்தருளும் நிபோங் திபால் திருத்தணி கல்யாண முருகன் கோவில் அமைந்துள்ளது.
இத்திருக்கோவில் கோலாலம்பூர் [Kuala Lumpur] பேருந்து நிலையத்திலிருந்து 316 கிமீ தொலைவு அல்லது சுங்கை ஜாவி [Sungai Jawi] பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது வால்டோர் [Val d'Or] பேருந்து நிலையத்திலிருந்து 10 கிமீ தொலைவு அல்லது பினாங்கு//ஜார்ஜ் டவுண் [Penang] பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது சிம்பாங் அம்பாட் [Simpang Ampat] பேருந்து நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவு அல்லது பத்து கவான் [Batu Kawan] பேருந்து நிலையத்திலிருந்து 23 கிமீ தொலைவு அல்லது பிறை [Perai] பேருந்து நிலையத்திலிருந்து 30 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் நிபோங் திபால் திருத்தணி கல்யாண முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் திருத்தணி கல்யாண முருகன் வள்ளி, தெய்வானை சமேதராக அருள்பாலிக்கின்றார்.
மலேசியா பினாங்கு மாநிலம் தெற்கு செபராங் பிறை மாவட்டம் நிபோங் திபால் திருத்தணி கல்யாண முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூசம் முக்கிய திருவிழாவாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. பங்குனி உத்திரம் மற்றும் கந்த சஷ்டி திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றன. பக்தர்கள் காவடி ஏந்தி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது இத்திருக்கோவிலின் சிறப்பம்சமாகும். மேலும் முருகப்பெருமானின் வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சித்ரா பௌர்ணமி, மாசி மகம் உள்ளிட்ட எல்லா திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் சிறப்புடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட அனைத்து இந்து பண்டிகைகளும் சிறப்பு வழிபாடுகளுடன் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
மலேசியா பினாங்கு மாநிலம் தெற்கு செபராங் பிறை மாவட்டம் நிபோங் திபால் திருத்தணி கல்யாண முருகன் கோவில் இப்பகுதியில் பிரசித்திப் பெற்ற முருகன் கோவிலாகும்.
தல அமைப்பு:
மலேசியா பினாங்கு மாநிலம் தெற்கு செபராங் பிறை மாவட்டம் நிபோங் திபால் திருத்தணி கல்யாண முருகன் கோவில் அழகிய அமைப்புடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் திருத்தணி கல்யாண முருகன் வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், உற்சவர்கள் உட்பட அனைத்துத் தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம்,பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சித்ரா பௌர்ணமி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
மன மகிழ்ச்சி தந்தருள, கேட்டதை கொடுக்க, பழவினைகள் அகல, சகல பிணிகள் விலக, திருமண பாக்கியம் உண்டாக, சந்தான பாக்கியம் வேண்டி, குடும்ப ஒற்றுமை ஓங்க, தீராத நோய்கள் தீர, தொழில் சிறக்க, துயரங்கள் குறைய, நல்லன நடைபெற, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
கேட்டதை கொடுத்தருளும் மலேசியா பினாங்கு நிபோங் திபால் திருத்தணி கல்யாண முருகனை வாழ்த்தி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1664 மன மகிழ்ச்சி தந்தருளும் மலேசியா பினாங்கு நிபோங் திபால் திருத்தணி கல்யாண முருகன்
Comments
Post a Comment