கோவில் 1661 - மலேசியா பினாங்கு ஜாவி தண்டாயுதபாணி கோவில்

 🙏🏽🙏🏽

தினம் ஒரு முருகன் ஆலயம்-1661

கவலைகள் தீர்க்கும் மலேசியா பினாங்கு ஜாவி தண்டாயுதபாணி கோவில்

25.12.2025 புதன்


அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில்

[நாட்டுக்கோட்டை செட்டியார் தண்டாயுதபாணி கோவில்]

Seberang Perai Selatan

14200 ஜாவி [Jawi]

[சுங்கை ஜாவி/Sungai Jawi]

தென் செபராங் பிறை மாவட்டம் [South Seberang Perai District]

பினாங்கு மாநிலம் [Penang State]

மலேசியா [Malaysia]

இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 317 கிமீ, வால்டோர் [Val d'Or] 6 கிமீ, பினாங்கு/ஜார்ஜ் டவுண் [Penang] 46 கிமீ, மலாக்கா [Malacca] 158 கிமீ


மூலவர்: தண்டாயுதபாணி

உற்சவர்: தண்டாயுதபாணி & முருகன் வள்ளி, தெய்வானை

தோற்றம்: 1864

கும்பாபிஷேகம்: 27.03.2024


தல மகிமை:

மலேசியா நாட்டில் பினாங்கு மாநிலம் தென் செபராங் பிறை மாவட்டத்தில் உள்ள ஜாவி [Jawi] நகரில் கவலைகள் தீர்க்கும் ஜாவி தண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் 1864-ம் ஆண்டு நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தினரால் தோற்றுவிக்கப்பட்டது. இத்திருக்கோவில் புதுப்பிக்கப்பட்டு 27.03.2024 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இத்திருக்கோவில் கோலாலம்பூர் [Kuala Lumpur] பேருந்து நிலையத்திலிருந்து 317 கிமீ தொலைவு அல்லது வால்டோர் [Val d'Or] பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது பினாங்கு//ஜார்ஜ் டவுண் [Penang] பேருந்து நிலையத்திலிருந்து 46 கிமீ தொலைவு அல்லது மலாக்கா [Malacca] பேருந்து நிலையத்திலிருந்து 158 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் ஜாவி தண்டாயுதபாணி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் தண்டாயுதபாணி மூலவராக கையில் வேலுடன் வீற்றிருந்து அருளாட்சி செய்கின்றார்.


மலேசியா பினாங்கு மாநிலம் தென் செபராங் பிறை மாவட்டம் ஜாவி தண்டாயுதபாணி கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி திருவிழா 3 நாட்கள் விமரிசையாக நடைபெறுகின்றது. முதல் நாள் சிறப்பு அபிஷேகம் சுவாமிக்கு நடைபெறும். இரண்டாம் நாள் தண்டாயுதபாணி சுவாமி ரதத்தில் திரு உலா வருவது சிறப்பம்சம். 3-ம் நாள் அபிஷேகம், மாகேஸ்வர பூஜை நடைபெறும். பின்னர் அன்னதானம் நடைபெறும். ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு பால்குடம், காவடி சுமந்து செல்கின்றனர். கந்த சஷ்டி திருவிழா 7 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. முதல் 6 நாட்கள் தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனைகளுடன் மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றது. ஆறாம் நாள் மாலை சூரசம்ஹாரம் நிகழ்வு சிறப்பாக நடக்கின்றது. ஏழாம் நாள் சுவாமிக்கும், தேவியருக்கும் அபிஷேகம், அலங்காரம் முடிந்து, சுவாமி திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறுகின்றது. ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து 7 நாட்களும் முருகப்பெருமானை வழிபட்டு, அன்னதானம் சாப்பிட்டு செல்வர். மேலும் முருகப்பெருமானின் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, மாசி மகம் உள்ளிட்ட எல்லா திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி உள்ளிட்ட அனைத்து இந்து பண்டிகைகளும் விசேஷ வழிபாடுகளுடன் நடைபெறுகின்றன.

தல வரலாறு:

பினாங்கின் பழைமையான நகரங்களில் ஜாவி நகரமும் ஒன்றாகும். மலாயாவுக்கு முதன்முதலில் அழைத்து வரப்பட்ட தமிழர்கள் இந்தச் சுங்கை ஜாவி பகுதிகளில்தான் ரப்பர் தோட்டங்களில் வேலைசெய்வதற்காக குடியேறினார்கள்.


மலேசியா பினாங்கு மாநிலம் தென் செபராங் பிறை மாவட்டம் ஜாவி தண்டாயுதபாணி கோவில் 1864-ல் இங்கு வசிக்கும் தமிழர்களால் சிறிய ஆலயமாக கட்டப்பட்டது. அச்சமயம் திரு O T. மெய்யப்ப செட்டியார் அவர்கள் கனவில் முருகப்பெருமான் தோன்றி, தண்டாயுதபாணி சிலை ஒன்று ஆற்றில் புதைந்து கிடப்பதாகச் சொன்னார். அதேபோல் ஆற்றில் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாலயம் அதற்காக கட்டப்பட்டது. நுழைவாயிலில், கம்பீரமான கட்டிடக்கலை அழகிய வடிவில் அமைந்துள்ளது. கோவிலில் அழகிய சிற்பங்கள் உள்ளன. இத்திருக்கோவில் நாட்டுக்கோட்டை செட்டியார் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது. சமீபத்தில் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 27.03.2024 அன்று மகா கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடந்தேறியது.


தல அமைப்பு:

மலேசியா பினாங்கு மாநிலம் தென் செபராங் பிறை மாவட்டம் ஜாவி தண்டாயுதபாணி கோவிலில் அழகிய கோபுரங்கள் மற்றும் கொடிமரம் உள்ளன. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் தண்டாயுதபாணி கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் பொலிவுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர்கள், மாரியம்மன், இடும்பன், சனீஸ்வரர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

சித்ரா பௌர்ணமி, கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், மாசி மகம், நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், பிரதோஷம், சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

கவலைகள் தீர, வேண்டும் வரங்கள் நிறைவேற, நல்ல எண்ணங்கள் உண்டாக. வினைகள் தீர, பிணிகள் போக்க, குழந்தை வரம் வேண்டி, நோய்கள் குணமடைய, மன மகிழ்ச்சி கிடைக்க, செல்வம் பெருக, நல்லனஅருள, ஏற்றங்கள் ஏற்பட, தோஷங்கள் அகல

நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 7.30-12 மாலை 5-9


வேண்டும் வரங்களை அள்ளி வழங்கும் மலேசியா பினாங்கு ஜாவி தண்டாயுதபாணி தாள் பணிந்து வணங்கிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏽🙏🏽


படம் 1 - 1661 கவலைகள் தீர்க்கும் மலேசியா பினாங்கு ஜாவி தண்டாயுதபாணி



படம் 2 - 1661 வேண்டும் வரங்களை அள்ளி வழங்கும் மலேசியா பினாங்கு ஜாவி தண்டாயுதபாணி

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்