கோவில் 1660 - மலேசியா கோலாலம்பூர் செதாபாக் திருமுருகன் கோவில்
🙏🏽🙏🏽
தினம் ஒரு முருகன் ஆலயம்-1660
நேர்மறை அதிர்வுகளை உண்டாக்கும் மலேசியா கோலாலம்பூர் செதாபாக் திருமுருகன் கோவில்
24.12.2025 புதன்
அருள்மிகு முருகன் திருக்கோவில்
Jalan Langkawi
Lot 21565, டானாவ் கோத்தா [DANAU KOTA]
செதாபாக் [SETAPAK]
[ஸ்தாப்பாக்]
53300 கோலாலம்பூர் [Kuala Lumpur]
கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம் [Federal Territory of Kuala Lumpur]
மலேசியா [Malaysia]
இருப்பிடம்: கோலாலம்பூர் விமான நிலையம் [Kuala Lumpur Airport] 66 கிமீ, கோலாலம்பூர் பேருந்து நிலையம் [Kuala Lumpur Bus Terminal Station] 11 கிமீ, மலாக்கா [Malacca] 158 கிமீ, ஈப்போ [Ipoh] 210 கிமீ, பினாங்கு [Penang] 355 கிமீ
மூலவர்: திருமுருகன்
உற்சவர்: திருமுருகன்
தோற்றம்: 1967
தல மகிமை:
மலேசியா தலைநகரம் கோலாலம்பூரில் உள்ள செதாபாக் [SETAPAK] டானாவ் கோத்தா [DANAU KOTA] பகுதியில் நேர்மறை அதிர்வுகளை உண்டாக்கும் கோலாலம்பூர் செதாபாக் திருமுருகன் கோவில் அமைந்துள்ளது.
இத்திருக்கோவில் மலேசியா தலைநகரம் கோலாலம்பூர் [Kuala Lumpur] விமான நிலையத்திலிருந்து 66 கிமீ தொலைவு அல்லது கோலாலம்பூர் [Kuala Lumpur] பேருந்து நிலையத்திலிருந்து 11 கிமீ தொலைவு அல்லது மலாக்கா [Malacca] பேருந்து நிலையத்திலிருந்து 155 கிமீ தொலைவு அல்லது ஈப்போ [Ipoh] பேருந்து நிலையத்திலிருந்து 210 கிமீ தொலைவு அல்லது பினாங்கு [Penang] பேருந்து நிலையத்திலிருந்து 355 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோலாலம்பூர் செதாபாக் திருமுருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் திருமுருகன் கையில் வேலுடன் வீற்றிருந்து ஆற்றலுடன் அருளாட்சி புரிகின்றார்.
மலேசியா கோலாலம்பூர் செதாபாக் திருமுருகன் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாகம் 11 நாட்கள் முக்கியத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி திருவிழா தினமும் அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனைகளுடன் மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றது. ஆறாம் நாள் மாலை சூரம்சம்ஹாரம் நிகழ்வு சிறப்பாக நடக்கின்றது. மேலும் முருகப்பெருமானின் தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, சித்ரா பௌர்ணமி, மாசி மகம் உள்ளிட்ட எல்லா திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி உள்ளிட்ட அனைத்து இந்து பண்டிகைகளும் விசேஷ வழிபாடுகளுடன் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
மலேசியா கோலாலம்பூர் செதாபாக் திருமுருகன் கோவில் முதலில் சிறிய முருகன் கோவிலாக 1967-ல் கம்போங் பாசீரில் இவ்வாலயம் துவங்கப்பட்டது. பின்னர் செதாபாக் நகருக்கு 1992-ல் மாற்றப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கோவில் நுழைவு வாயிலில் 2022-ம் ஆண்டு 36 அடி உயர முருகன் சிலை நிறுவப்பட்டது. கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு சமீபத்தில் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தல அமைப்பு:
மலேசியா கோலாலம்பூர் செதாபாக் திருமுருகன் கோவில் ஆகம விதிகளின் படி கட்டப்பட்டுள்ளது. கோவில் கோபுரங்கள், சிற்பங்கள் பொலிவுடன் அமைந்துள்ளன. கோவில் நுழைவாயில் முன் 36 அடி உயர முருகன் பிரமாண்டமாக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். இந்த முருகப்பெருமான் நான்கு திருக்கரங்களுடன் பக்தர்களுக்கு அருளுவது மலேசியா திருநாட்டில் எங்குமே காண முடியாத சிறப்பம்சமாகும். இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் திருமுருகன் கையில் வேலுடன் அழகிய திருக்கோலத்தில் வீற்றிருந்து ஆற்றலுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். அருகில் விநாயகர், மாரியம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். மேலும் உற்சவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
வைகாசி விசாகம், தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, சித்ரா பௌர்ணமி, மாசி மகம், நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், பிரதோஷம், சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
நேர்மறை அதிர்வுகள் உண்டாக. மன அமைதி பெற, விருப்பங்கள் நிறைவேற, இரு வினைகள் தீர, பிணிகள் அகல, சந்தான பாக்கியம் வேண்டி, உடல் நலன் வேண்டி, ஐஸ்வர்யங்கள் பெருக, நல்லன நடைபெற, வாழ்வில் திருப்பங்கள் ஏற்பட, தொல்லைகள் மறைய, தோஷங்கள் நீங்க
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6-9 மாலை 6-9
மன அமைதி தந்தருளும் மலேசியா கோலாலம்பூர் செதாபாக் திருமுருகனை மனமுருகி வேண்டிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏽🙏🏽
படம் 1 - 1660 நேர்மறை அதிர்வுகளை உண்டாக்கும் மலேசியா கோலாலம்பூர் செதாபாக் திருமுருகன்
Comments
Post a Comment