கோவில் 1535 - கோயம்புத்தூர் மாம்பள்ளி முருகன் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1535

தீராத நோய்களை தீர்த்தருளும் கோயம்புத்தூர் மாம்பள்ளி முருகன் கோவில்

21.08.2025 வியாழன்


அருள்மிகு மாம்பள்ளி முருகன் திருக்கோவில்

மாம்பள்ளி

கல்லாபுரம்

ஒத்தக்கால்மண்டபம் அருகில்

கோயம்புத்தூர் 641032

கோயம்புத்தூர் மாவட்டம்

இருப்பிடம்: காந்திபுரம் 24 கிமீ, ஒத்தக்கால்மண்டபம் 6 கிமீ, உக்கடம் 20 கிமீ, கோயம்புத்தூர் ரயில் நிலையம் 21 கிமீ, சிங்காநல்லூர் 23 கிமீ, பொள்ளாச்சி 26 கிமீ


மூலவர்: முருகன்

உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை


தல மகிமை:

கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 24 கிமீ தொலைவில் இருக்கும் மாம்பள்ளி கிராமத்தில் தீராத நோய்களை தீர்க்கும் கோயம்புத்தூர் மாம்பள்ளி முருகன் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் ஒத்தக்கால்மண்டபத்திலிருந்து 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும் உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவு அல்லது கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவு அல்லது சிங்காநல்லூரிலிருந்து 23 கிமீ தொலைவு அல்லது பொள்ளாச்சி நகரிலிலிருந்து 26 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கோயம்புத்தூர் மாம்பள்ளி முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் முருகன் கையில் வேலேந்தி ஆற்றலுடன் திருக்காட்சி அருள்கின்றார்.


கோயம்புத்தூர் மாம்பள்ளி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் இக்கோவிலில் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை போன்ற நன்னாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.


தல வரலாறு:

கோயம்புத்தூர் ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் மாம்பள்ளி முருகன் கோவில் பிரசித்திப் பெற்றக் கோவிலாகும்.


தல அமைப்பு:

கோயம்புத்தூர் மாம்பள்ளி முருகன் திருக்கோவில் கருவறையில் மூலவர் முருகன் கைகளில் வேல் மற்றும் சேவற்கொடி ஏந்தி நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உள்ளிட்ட தெய்வங்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

தீராத நோய்களை தீர, நினைத்தது நிறைவேற, வினைகள் விலக, குழந்தைப்பேறு கிட்ட, ஞானம் மேம்பட, வியாபாரம் விருத்தியடைய, நல்லன வேண்டி, தடைகள் நீங்க, மன அமைதி கிடைக்க, தோஷங்கள் அகல


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


நினைத்ததை எல்லாம் நிறைவேற்றும் கோயம்புத்தூர் மாம்பள்ளி முருகன் திருப்பாதங்கள் பணிந்து போற்றிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ சித்தாந்தச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1535 தீராத நோய்களை தீர்த்தருளும் கோயம்புத்தூர் மாம்பள்ளி முருகன்


படம் 2 - 1535 நினைத்ததை எல்லாம் நிறைவேற்றும் கோயம்புத்தூர் மாம்பள்ளி முருகன் கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்