கோவில் 1453 - நாமக்கல் மோடமங்கலம் முருகன் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-1453
சங்கடங்கள் தீர்க்கும் நாமக்கல் மோடமங்கலம் முருகன் கோவில்
31.05.2025 சனி
அருள்மிகு முருகன் திருக்கோவில்
புதுக்குளம்
மோடமங்கலம் 637304
திருச்செங்கோடு வட்டம்
நாமக்கல் மாவட்டம்
இருப்பிடம்: நாமக்கல் 44 கிமீ, மோடமங்கலம் பே. நி. 3 கிமீ, திருச்செங்கோடு 7 கிமீ, சங்ககிரி 8 கிமீ, பள்ளிபாளையம் 18 கிமீ, ஈரோடு 23 கிமீ, குமாரபாளையம் 25 கிமீ
மூலவர்: முருகன்
தல மகிமை:
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து 44 கிமீ தொலைவில் இருக்கும் மோடமங்கலம் கிராமத்திற்கு அருகில் சங்கடங்கள் தீர்க்கும் மோடமங்கலம் முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் மோடமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவு அல்லது திருச்செங்கோடு பேருந்து நிலையத்திலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது சங்ககிரி பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது பள்ளிபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவு அல்லது ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து 23 கிமீ தொலைவு அல்லது குமாரபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 25 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மோடமங்கலம் முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் முருகன் கையில் வேலுடன் வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றார்.
நாமக்கல் மாவட்டம் மோடமங்கலம் முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் திருவிழாக்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. இத்திருக்கோவிலில் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை முதலான முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பு வழிபாடுகளுடன் நடக்கின்றன. சஷ்டி, கிருத்திக நன்னாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
நாமக்கல் மாவட்டம் மோடமங்கலம் முருகன் கோவில் இப்பகுதியில் பிரசித்திப் பெற்றக் கோவிலாகும்.
தல அமைப்பு:
நாமக்கல் மாவட்டம் மோடமங்கலம் முருகன் திருக்கோவில் கருவறையில் முருகன் வலது கையில் வேலுடனும், இடது கையை ஒயிலாக இடுப்பில் வைத்தும் நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
சங்கடங்கள் தீர, விருப்பங்கள் நிறைவேற, பிணிகள் அகல, குழந்தைப்பேறு வேண்டி, நோய்கள் குணமடைய, நல்லன நடைபெற, மன மகிழ்ச்சி கிடைக்க, விவசாயம் செழிக்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்,
விருப்பங்களை நிறைவேற்றும் நாமக்கல் மோடமங்கலம் முருகனை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - 1453 சங்கடங்கள் தீர்க்கும் நாமக்கல் மோடமங்கலம் முருகன்
படம் 2 - 1453 விருப்பங்களை நிறைவேற்றும் நாமக்கல் மோடமங்கலம் முருகன்
Comments
Post a Comment