கோவில் 1450 - அமெரிக்கா முசோரி செயின்ட் லூயிஸ் முருகன் (ஆறுமுக சுவாமி) கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-1450
வினைகள் தீர்க்கும் அமெரிக்கா முசோரி செயின்ட் லூயிஸ் முருகன் (ஆறுமுக சுவாமி) கோவில்
28.05.2025 புதன்
அருள்மிகு முருகன் (ஆறுமுக சுவாமி) திருக்கோவில்
16455 Village Plaza View Drive,
Wildwood,
செயின்ட் லூயிஸ் [St. Louis County]
முசோரி [Musoari] MO 63011,
அமெரிக்கா [USA]
இருப்பிடம்: செயின்ட் லூயிஸ் 30 மைல், முசோரி 87 மைல்
மூலவர்: முருகன் (ஆறுமுக சுவாமி)
தல மகிமை:
வட அமெரிக்கா நாட்டில் முசோரி மாகாணத்தில் (மாநிலம்/State) செயின்ட் லூயிஸ் கவுண்டியில் (மாவட்டம்) Wildwood பகுதியில் செயின்ட் லூயிஸ் முருகன் (ஆறுமுக சுவாமி) கோவில் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் அமைந்த ஒரே முருகன் கோவில் இதுவாகும். செயின்ட் லூயிஸ் முருகன் (ஆறுமுக சுவாமி) கோவில் செயின்ட் லூயிஸ் 30 மைல் தூரத்திலும், முசோரி 87 மைல் தூரத்திலும் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் மூலவர்/உற்சவ மூர்த்தி முருகன் (ஆறுமுக சுவாமி) வள்ளி, தெய்வானையுடன் அருளாட்சி செய்கின்றார்.
செயின்ட் லூயிஸ் முருகன் (ஆறுமுக சுவாமி) கோவிலில் தமிழகம் போன்றே முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. தைப்பூசம், பங்குனி உத்திரம் (திருக்கல்யாணம்), கந்த சஷ்டி (திருக்கல்யாணம்), வைகாசி விசாகம், திருக்கார்த்திகை போன்ற திருவிழாக்கள் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. மேலும் மகா சிவராத்திரி, அரூத்ரா தரிசனம், ராமநவமி, வைகுண்ட ஏகாதசி, விநாயகர் சதுர்த்தி, ஆஞ்சநேய ஜெயந்தி, ஆங்கில புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட அனைத்து இந்து திருவிழாக்களும் சிறப்பு பூஜைகளுடன் நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி போன்ற நன்னாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன. இக்கோவிலில் திருப்புகழ், இதர முருகன் கவசங்கள், திருமுறைகள், வேதங்கள் பாடியும், பயில்வித்தும் வருவது சிறப்பம்சம்.
தல வரலாறு:
முசோரி [Musoari] மாநிலத்தில் அமைந்துள்ள ஒரே முருகன் கோவில் செயின்ட் லூயிஸ் முருகன் கோவிலாகும். முதன் முதலில் தமிழக ஆகம விதிகளின் படி விநாய்கர் சிலையும், முருகப்பெருமானின் வேலும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தற்போது தற்காலிக இடத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகன் ((ஆறுமுக சுவாமி) மற்றும் அனைத்து பரிவார தெய்வங்கள் சிலைகளும் உள்ளன, புதிய கோவில் அருகாமையில் கட்டப்பட்டு வருகிறது.
தல அமைப்பு:
செயின்ட் லூயிஸ் முருகன் (ஆறுமுக சுவாமி) கோவில் அழகிய அமைப்புடன் கட்டப்பட்டுள்ளது. மூலவர் முருகன் (ஆறுமுக சுவாமி) ஆறு திருமுகங்களுடன் வள்ளி, தெய்வானையுடன் பொலிவுற வீற்றிருந்து பக்தர்களூக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், வேல், சிவபெருமான், உமையம்மை, தேவியர் சகிதம் பெருமாள் மற்றும் இதர் பரிவார தெய்வங்களின் சிலைகளும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம் (திருக்கல்யாணம்), கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி, அரூத்ரா தரிசனம், ராமநவமி, வைகுண்ட ஏகாதசி, விநாயகர் சதுர்த்தி, ஆஞ்சநேய ஜெயந்தி, ஆங்கில புத்தாண்டு, பொங்கல், சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி
பிரார்த்தனை:
வினைகள் தீர, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, விருப்பங்கள் நிறைவேற, பிணிகள் விலக, திருமணத்தடை நீங்க, குழந்தைப்பேறு வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, நோய்கள் குணமாக, சஞ்சலங்கள் அகல, மன அமைதி கிட்ட, தொழில் சிறக்க, பதவி உயர்வு கிடைக்க, தோஷங்கள் போக்க
நேர்த்திக்கடன்:
பால்குடம், ருத்ராபிஷேகம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்,
நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க அருளும் அமெரிக்கா முசோரி செயின்ட் லூயிஸ் முருகன் (ஆறுமுக சுவாமி) திருவடிகளை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - 1450 வினைகள் தீர்க்கும் அமெரிக்கா முசோரி செயின்ட் லூயிஸ் முருகன் (ஆறுமுக சுவாமி)
Comments
Post a Comment