கோவில் 1420 - நாமக்கல் சிங்களகோம்பை முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1420
சிக்கல்கள் தீர்க்கும் நாமக்கல் சிங்களகோம்பை முருகன் கோவில்
28.04.2025 திங்கள்
அருள்மிகு முருகன் திருக்கோவில்
பழமரத்துகட்டி தோட்டம்
சிங்களகோம்பை 637013
சேந்தமங்கலம் வட்டம்
நாமக்கல் மாவட்டம்
இருப்பிடம்: நாமக்கல் 25 கிமீ, சேந்தமங்கலம் 19 கிமீ, மோகனூர் 25 கிமீ
மூலவர்: முருகன்
உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து 25 கிமீ தொலைவில் இருக்கும் சிங்களகோம்பை கிராமம் பழமரத்துகட்டி தோட்டம் பகுதியில் சிக்கல்கள் தீர்க்கும் சிங்களகோம்பை முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் சேந்தமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து 19 கிமீ தொலைவு அல்லது மோகனூர் பேருந்து நிலையத்திலிருந்து 25 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் சிங்களகோம்பை முருகன் கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவர் முருகன் அருளாட்சி புரிகின்றார்.
நாமக்கல் மாவட்டம் சிங்களகோம்பை முருகன் கோவிலில் தைப்பூசம் வருடந்தோறும் வெகு விமரிசையாக நடைபெறும். மேலும் பங்குனி உத்திரம் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை என முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
நாமக்கல் மாவட்டம் சிங்களகோம்பை முருகன் கோவில் இப்பகுதியில் சிறப்பு மிக்க கோவில்.
தல அமைப்பு:
நாமக்கல் சிங்களகோம்பை முருகன் கோவில் கருவறையில் மூலவர் முருகன் கையில் வேல் கொண்டு பாலமுருகனாக கருணை பொங்க பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் வேல், மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
சிக்கல்கள் தீர, நினைத்தது நிறைவேற, பிணிகள் நீங்க, குழந்தை வேண்டி, குடும்ப ஒற்றுமை ஓங்க, நோய்கள் குணமாக, நல்லன நடைபெற, நேர்மறை எண்ணங்கள் உண்டாக, தொஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
நினைத்ததை எல்லாம் நிறைவேற்றும் நாமக்கல் சிங்களகோம்பை முருகனை மனமுருகி வேண்டிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1420 சிக்கல்கள் தீர்க்கும் நாமக்கல் சிங்களகோம்பை முருகன்
படம் 2 - 1420 நினைத்ததை எல்லாம் நிறைவேற்றும் நாமக்கல் சிங்களகோம்பை முருகன் கோவில் உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான்
Comments
Post a Comment