கோவில் 1416 - நாமக்கல் குமாரபாளையம் முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1416
இகபர சுகமருளும் நாமக்கல் குமாரபாளையம் முருகன் கோவில்
24.04.2025 வியாழன்
அருள்மிகு முருகன் திருக்கோவில்
JKK சுந்தரம் நகர்
குமாரபாளையம் 638183
குமாரபாளையம் வட்டம்
நாமக்கல் மாவட்டம்
இருப்பிடம்: நாமக்கல் 65 கிமீ, குமாரபாளையம் 2 கிமீ, பவானி 4 கிமீ, ஈரோடு 15 கிமீ, சங்ககிரி 21 கிமீ, திருச்செங்கோடு 28 கிமீ
மூலவர்: முருகன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல மகிமை:
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து 65 கிமீ தொலைவில் இருக்கும் குமாரபாளையம் நகரில் உள்ள JKK சுந்தரம் நகரில் இகபர சுகமருளும் குமாரபாளையம் முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் குமாரபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவு அல்லது பவானி பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது சங்ககிரி பேருந்து நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவு அல்லது திருச்செங்கோடு பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் குமாரபாளையம் முருகன் கோவிலை அடையலாம். இக்கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத முருகன் மூலவராக அருளாட்சி புரிகின்றார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் முருகன் கோவிலில் பங்குனி உத்திரம் முக்கிய திருவிழாவாக ஆண்டு தோறும் சிறப்பு தீபாரதனைகளுடன் நடைபெறுகிறது. மேலும் தைப்பூசம் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை என முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் விமரிசையாக நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை நாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகரில் அமைந்துள்ள முக்கியமான முருகன் கோவிலாகக் கருதப்படுகிறது.
தல அமைப்பு:
அழகிய அமைப்புடன் கூடிய நாமக்கல் குமாரபாளையம் முருகன் கோவிலில் கொடிமரம், மயில், பலிபீடம் உள்ளன. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராக கையில் வேல் கொண்டு திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், உற்சவர்கள், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, துர்க்கை, சிவபெருமான், நவக்கிரகங்கள் முதலான தெய்வங்கள் அனைத்தும் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
இகபர சுகமருள, எண்ணியது ஈடேற, திருமணம் நடைபெற, குழந்தை பாக்கியம் வேண்டி, வினைகள் விலக, பிணிகள் அகல, குடும்ப வாழ்வு சிறக்க, நோய்கள் குணமாக, மன மகிழ்ச்சி கிட்ட, சிக்கல்கள் தீர, தோஷங்கள் நீங்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
எண்ணிய எண்ணங்களை ஈடேற்றும் நாமக்கல் குமாரபாளையம் முருகன் மனமுருக வேண்டிக் கொள்வோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1416 இகபர சுகமருளும் நாமக்கல் குமாரபாளையம் முருகன்
படம் 2 - 1416 எண்ணிய எண்ணங்களை ஈடேற்றும் நாமக்கல் குமாரபாளையம் முருகன் கோவில்
Comments
Post a Comment