கோவில் 1415 - நாமக்கல் ஏமப்பள்ளி குழந்தை வேலாயுத சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1415

வாழ்வில் ஏற்றங்கள் தரும் நாமக்கல் ஏமப்பள்ளி குழந்தை வேலாயுத சுவாமி கோவில்

23.04.2025 புதன்


அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவில் [TM009136]

ஏமப்பள்ளி 637211

திருச்செங்கோடு வட்டம்

நாமக்கல் மாவட்டம்


இருப்பிடம்: நாமக்கல் 45 கிமீ, திருச்செங்கோடு 9 கிமீ, ஈரோடு 20 கிமீ, சங்ககிரி 21 கிமீ, குமாரபாளையம் 31 கிமீ


மூலவர்: குழந்தை வேலாயுத சுவாமி


தல மகிமை:

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து 45 கிமீ தொலைவில் இருக்கும் ஏமப்பள்ளி கிராமத்தில் வாழ்வில் ஏற்றங்கள் தரும் ஏமப்பள்ளி குழந்தை வேலாயுத சுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் திருச்செங்கோடு பேருந்து நிலையத்திலிருந்து 9 கிமீ தொலைவு அல்லது ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவு அல்லது சங்ககிரி பேருந்து நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவு அல்லது குமாரபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 31 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் ஏமப்பள்ளி குழந்தை வேலாயுத சுவாமி கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவர் குழந்தை வேலாயுத சுவாமி சிறிய பாலகனாக அருள்புரிகின்றார்.


நாமக்கல் மாவட்டம் ஏமப்பள்ளி குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திரம் விமரிசையாக நடைபெறுகிறது. மேலும் தைப்பூசம் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை என முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.


தல வரலாறு:

நாமக்கல் மாவட்டம் ஏமப்பள்ளி குழந்தை வேலாயுத சுவாமி கோவில் மிகவும் பழமையானது. இத்திருக்கோவில் நிர்வாகத்தை தற்போது இந்து அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது.


தல அமைப்பு:

நாமக்கல் ஏமப்பள்ளி குழந்தை வேலாயுத சுவாமி கோவில் கருவறையில் மூலவர் குழந்தை வேலாயுத சுவாமி அழகு பாலகனாக நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறை எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், உற்சவர் உள்ளிட்ட தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

வாழ்வில் ஏற்றங்கள் பெற, தொல்லைகள் அகல, கல்வி, ஞானம் மேம்பட, தொழில் சிறக்க, புத்திரப் பேறு வேண்டி, எண்ணியது ஈடேற, மன அமைதி கிடைக்க, நோய்கள் தீர, நல்லன நடைபெற


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


தொல்லைகளை அகற்றும் நாமக்கல் ஏமப்பள்ளி குழந்தை வேலாயுத சுவாமியை மனமுருகி வேண்டுவோம்!

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1415 வாழ்வில் ஏற்றங்கள் தரும் நாமக்கல் ஏமப்பள்ளி குழந்தை வேலாயுத சுவாமி கோவில்


படம் 2 - 1415 தொல்லைகளை அகற்றும் நாமக்கல் ஏமப்பள்ளி குழந்தை வேலாயுத சுவாமி கோவில்



Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்