கோவில் 1414 - நாமக்கல் காளங்காணி சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1414
தீமைகளை அகற்றும் நாமக்கல் களங்காணி சுப்பிரமணிய சுவாமி கோவில் 22.04.2025 செவ்வாய் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM009092] களங்காணி 637014 நாமக்கல் வட்டம் நாமக்கல் மாவட்டம் இருப்பிடம்: நாமக்கல் 10 கிமீ, சேந்தமங்கலம் 10 கிமீ, ராசிபுரம் 18 கிமீ மூலவர்: சுப்பிரமணிய சுவாமி தல மகிமை: நாமக்கல் மாவட்டம் நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து 10 கிமீ தொலைவில் இருக்கும் களங்காணி கிராமத்தில் தீமைகளை அகற்றும் களங்காணி சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் சேந்தமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து 10 கிமீ தொலைவு அல்லது ராசிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் நாமக்கல் மாவட்டம் நாமக்கல் வட்டம் களங்காணி சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி அருளாட்சி புரிகின்றார். இக்கோவில் கும்பாபிஷேகம் 1992-ல் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் களங்காணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் தைப்பூசம் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை என முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன. தல வரலாறு: மிகவும் பழமையான நாமக்கல் மாவட்டம் களங்காணி சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகத்தை தற்போது இந்து அறநிலையத் துறை நாமக்கல் நிர்வகித்து வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் 1992-ல் சிறப்பாக நடைபெற்றது. தல அமைப்பு: ஆகம அமைப்புடன் கூடிய நாமக்கல் களங்காணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அழகிய சிற்பங்கள் நிறைந்துள்ளன. இத்திருக்கோவில் கருவறையில் சுப்பிரமணிய சுவாமி மூலவராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறை எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், உற்சவர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து பரிவாரத் தெய்வங்களும் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். திருவிழா: பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை பிரார்த்தனை: தீமைகளை அகல, சகல செல்வங்களும் பெற, வினைகள் அகல, பிணிகள் போக்க, திருமணத்தடை நீங்க, குழந்தை வேண்டி, நோய்கள் குணமாக, கேட்டது கிடைத்திட, மன அமைதி கிடைக்க, தோஷங்கள் விலக நேர்த்திக்கடன்: அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம் சகல செல்வங்களும் தந்தருளும் நாமக்கல் களங்காணி சுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்குவோம்! வேலும் மயிலும் துணை! திருச்சிற்றம்பலம்! முருகாலய முரசு Dr K. முத்துக்குமரன் Ph. D 9489302842 bamikumar@gmail.com கோயம்புத்தூர் 25 🙏🏻🙏🏻
படம் 1 - 1414 தீமைகளை அகற்றும் நாமக்கல் களங்காணி சுப்பிரமணிய சுவாமி கோவில்
Comments
Post a Comment