கோவில் 1413 - நாமக்கல் காளப்பநாயக்கன்பட்டி கருமலை முருகன் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1413

மன அமைதி தரும் நாமக்கல் காளப்பநாயக்கன்பட்டி கருமலை முருகன் கோவில்

21.04.2025 திங்கள்


அருள்மிகு கருமலை முருகன் திருக்கோவில் [TM009201]

காளப்பநாயக்கன்பட்டி 637404

சேந்தமங்கலம் வட்டம்

நாமக்கல் மாவட்டம்


இருப்பிடம்: நாமக்கல் 15 கிமீ, சேந்தமங்கலம் 8 கிமீ, ராசிபுரம் 20 கிமீ


மூலவர்: முருகன்

உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை

தல விருட்சம்: வில்வ மரம்


தல மகிமை:

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவில் இருக்கும் காளப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள கருமலையில் மன அமைதி தரும் காளப்பநாயக்கன்பட்டி கருமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் சேந்தமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது ராசிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் காளப்பநாயக்கன்பட்டி கருமலை முருகன் கோவிலை அடையலாம். இக்கோவிலில் முருகப்பெருமான் ஆற்றலுடன் அருள்பாலிக்கின்றார். இக்கோவில் கும்பாபிஷேகம் 2007 மற்றும் 2024-ல் நடைபெற்றன.


நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டியில் உள்ள கருமலை மலைகளால் சூழப்பட்டதால் இங்கு அமைந்திருக்கும் முருகன் கோவில் கருமலை முருகன் என்றழைக்கப்படுகிறது. இது இயற்கையான இடத்தால் சூழப்பட்டுள்ளது. இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம் முக்கிய திருவிழாவாக சிறப்பு பூஜைகள், வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் திருவீதி உலா விமரிசையாக நடைபெறுகிறது. தைப்பூசத் திருவிழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் முருகனை வழிபட்டு செல்கின்றனர். மேலும் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை என அனைத்து முருகப்பெருமானின் திருவிழாக்களும் விசேஷ பூஜைகளுடன் நடைபெறுகின்றன. அதிக அளவில் பக்தர்கள் சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விரதமிருந்து முருகனை வழிபடுகின்றனர். கார்த்திகை, மார்கழியில் இப்பகுதி பக்தர்கள் குழுக்கள் அமைத்து ஆறுபடை கோவில்களுக்கும் செல்வது சிறப்பம்சமாகும். இத்திருக்கோவிலில் வில்வ மரம் முக்கிய பங்கு வகிக்கிறது.


தல வரலாறு:

இந்து அறநிலையத் துறை நாமக்கல் காளப்பநாயக்கன்பட்டி கருமலை முருகன் கோவிலை நிர்வகித்து வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் 2007 மற்றும் 2024-ல் சிறப்பாக நடைபெற்றன.


தல அமைப்பு:

நாமக்கல் காளப்பநாயக்கன்பட்டி கருமலை முருகன் கோவில் கருவறையில் முருகன் மூலவராக நின்ற திருக்கோலத்தில் கைகளில் வேல் மற்றும் சேவற்கொடி ஏந்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறை எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், உற்சவர்கள், நவக்கிரகங்கள் முதலான தெய்வங்கள் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

மன அமைதி பெற, விருப்பங்கள் நிறைவேற, வினைகள் தீர, பிணிகள் அகல, குழந்தை பாக்கியம் கிட்ட, சஞ்சலங்கள் போக்க, நல்லன அருள, மன மகிழ்ச்சி கிடைக்க, உடல் நலன் வேண்டி


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


விருப்பங்களை நிறைவேற்றும் நாமக்கல் காளப்பநாயக்கன்பட்டி கருமலை முருகன் திருவடிகள் பணிந்து வேண்டிடுவோம்!

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1413 மன அமைதி தரும் நாமக்கல் காளப்பநாயக்கன்பட்டி கருமலை முருகன்


படம் 2 - 1413 விருப்பங்களை நிறைவேற்றும் நாமக்கல் காளப்பநாயக்கன்பட்டி கருமலை முருகன்


Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்