கோவில் 1410 - நாமக்கல் கூனவேலம்பட்டிபுதூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1410
கேட்கும் வரமளிக்கும் நாமக்கல் கூனவேலம்பட்டிபுதூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
18.04.2025 வெள்ளி
அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
கூனவேலம்பட்டிபுதூர் 637401
ராசிபுரம் வட்டம்
நாமக்கல் மாவட்டம்
இருப்பிடம்: நாமக்கல் 24 கிமீ, ராசிபுரம் 5 கிமீ, சேலம் 28 கிமீ, திருச்செங்கோடு 32 கிமீ
மூலவர்: பாலசுப்பிரமணிய சுவாமி
தல மகிமை:
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து 24 கிமீ கூனவேலம்பட்டிபுதூர் கிராமத்தில் கேட்கும் வரமளிக்கும் கூனவேலம்பட்டிபுதூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் ராசிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவு அல்லது சேலம் மாநகரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவு அல்லது திருச்செங்கோடு பேருந்து நிலையத்திலிருந்து 32 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் கூனவேலம்பட்டிபுதூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி அருளாட்சி புரிகின்றார். இத்திருக்கோவிலுக்கருகில் சிறப்பு மிக்க கூனவேலாம்பட்டி வெங்கடேசப் பெருமாள் கோவில் இருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.
கூனவேலாம்பட்டி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருடந்தோறும் தைப்பூசம் முக்கிய திருவிழாவாக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. பங்குனி உத்திரம் திருவிழாவும் விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் திருவிழாக்களும் விசேஷ பூஜைகளுடன் நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை முதலான விசேஷ நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கூனவேலாம்பட்டி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் செங்குந்தர் கைக்கோல முதலியார் சமூகத்தால் கட்டப்பட்டு, நிர்வகிக்கப்படுகிறது.
தல அமைப்பு:
அழகிய அமைப்புடன் கூடிய கூனவேலாம்பட்டி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கருவறையில் பாலசுப்பிரமணிய சுவாமி மூலவராக வலது திருக்கரத்தில் வேலேந்தியும், இடது திருக்கரத்தை இடுப்பில் வைத்தும் நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி அருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறை எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சிவபெருமான், அம்பாள், நவக்கிரகங்கள் முதலான தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
கேட்கும் வரமளிக்க, சஞ்சலங்கள் தீர, வினைகள் நீங்க, பிணிகள் அகல, ஞானம் சிறக்க, நினைத்த காரியங்கள் வெற்றியடைய, மன அமைதி வேண்டி, உடல் ஆரோக்கியம் உண்டாக, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
சஞ்சலங்கள் தீர்க்கும் நாமக்கல் கூனவேலம்பட்டிபுதூர் பாலசுப்பிரமணிய சுவாமி திருப்பாதங்கள் பணிந்து வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1410 கேட்கும் வரமளிக்கும் நாமக்கல் கூனவேலம்பட்டிபுதூர் பாலசுப்பிரமணிய சுவாமி
படம் 2 - 1410 சஞ்சலங்கள் தீர்க்கும் நாமக்கல் கூனவேலம்பட்டிபுதூர் பாலசுப்பிரமணிய சுவாமி
Comments
Post a Comment