கோவில் 1389 - சேலம் ஏற்காடு முருகன் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1389

மன மகிழ்ச்சி தந்தருளும் சேலம் ஏற்காடு முருகன் கோவில்

28.03.2025 வெள்ளி


அருள்மிகு முருகன் திருக்கோவில்

ஏற்காடு 636601

ஏற்காடு வட்டம்

சேலம் மாவட்டம்


இருப்பிடம்: சேலம் புதிய பேருந்து நிலையம் 30 கிமீ, ஏற்காடு 2 கிமீ


மூலவர்: முருகன்


தல மகிமை:

சேலம் மாவட்டம் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 30 கிமீ தொலைவில் இருக்கும் ஏற்காடு பகுதியில் மன மகிழ்ச்சி தந்தருளும் ஏற்காடு முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் ஏற்காடு பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சேலம் மாவட்டம் ஏற்காடு முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் முருகன் மூலவராக அருள்கின்றார்.


சேலம் ஏற்காடு முருகன் கோவிலில் ஆண்டு தோறும் முக்கிய திருவிழாவாக தைப்பூசம் மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது. மேலும் பங்குனி உத்திரம் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.


தல வரலாறு:

சேலம் ஏற்காடு முருகன் கோவில் மிகவும் பழமையான திருக்கோவிலாகக் கருதப்படுகிறது. இக்கோவில் முக்கிய பிரார்த்தனை தலமாகவும் திகழ்கின்றது.


தல அமைப்பு:

சேலம் ஏற்காடு முருகன் கோவில் கருவறையில் மூலவர் முருகன் கையில் வேலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில் மற்றும் பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், நாகர்கள், அங்காயி அம்மன் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

மன மகிழ்ச்சி பெற, சகல செல்வங்கள் கிடைக்க, குழந்தைப்பேறு வேண்டி, குடும்ப வாழ்வு மேம்பட, நல்லன நடைபெற, நேர்மறை எண்ணங்கள் உண்டாக, சிக்கல்கள் தீர, தோஷங்கள் விலக


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


சகல செல்வங்களையும் தந்தருளும் சேலம் ஏற்காடு முருகனை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1389 மன மகிழ்ச்சி தந்தருளும் சேலம் ஏற்காடு முருகன் கோவில்


படம் 2 - 1389 சகல செல்வங்களையும் தந்தருளும் சேலம் ஏற்காடு முருகன் கோவில்



Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்