கோவில் 1387 = சேலம் ஊஞ்சகாடு முருகன் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1387

மன அமைதி தரும் சேலம் ஊஞ்சகாடு முருகன் கோவில்

26.03.2025 புதன்


அருள்மிகு முருகன் திருக்கோவில்

ஊஞ்சகாடு 636451

மேட்டூர் வட்டம்

சேலம் மாவட்டம்


இருப்பிடம்: சேலம் புதிய பேருந்து நிலையம் 36 கிமீ, மேச்சேரி 8 கிமீ, ஓமலூர் 23 கிமீ, தாரமங்கலம் 26 கிமீ, மேட்டூர் 29 கிமீ


மூலவர்: முருகன்


தல மகிமை:

சேலம் மாவட்டம் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 36 கிமீ தொலைவில் இருக்கும் ஊஞ்சகாடு கிராமத்தில் மன அமைதி தரும் ஊஞ்சகாடு முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் மேச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது ஓமலூர் பேருந்து நிலையத்திலிருந்து 23 கிமீ தொலைவு அல்லது தாரமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து 26 கிமீ தொலைவு அல்லது மேட்டூர் பேருந்து நிலையத்திலிருந்து 29 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் ஊஞ்சகாடு முருகன் கோவிலை அடையலாம். இக்கோவிலில் முருகன் மூலவராக அருளாட்சி புரிகின்றார். இக்கோவிலுக்கு அருகில் ஊஞ்சகாடு காளியம்மன் கோவில் இருப்பது கூடுதல் சிறப்பம்சம்.


சேலம் ஊஞ்சகாடு முருகன் கோவிலில் தைப்பூசம் திருவிழா வருடந்தோறும் சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் பங்குனி உத்திரம் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.


தல வரலாறு:

சேலம் ஊஞ்சகாடு முருகன் கோவில் மிகவும் பழமையான கோவிலாகக் கருதப்படுகிறது..


தல அமைப்பு:

சேலம் ஊஞ்சகாடு முருகன் கோவில் கருவறையில் மூலவர் முருகன் கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில் மற்றும் பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், இடும்பன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களும் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

மன அமைதி கிட்ட, நினைத்தது நிறைவேற, வினைகள் அகல, பிணிகள் நீங்க, குழந்தை வேண்டி, நோய்கள் குணமாக, கல்வி சிறக்க, தொழில் மேம்பட, நேர்மறை அதிர்வுகள் உண்டாக, சஞ்சலங்கள் தீர


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


நினைத்ததை நிறைவேற்றும் சேலம் ஊஞ்சகாடு முருகன் திருவடிகள் பணிந்து தொழுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1387 மன அமைதி தரும் சேலம் ஊஞ்சகாடு முருகன்


படம் 2 - 1387 நினைத்ததை நிறைவேற்றும் சேலம் ஊஞ்சகாடு முருகன்





Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்