கோவில் 1386 - சேலம் புக்கம்பட்டி விலாரிமலை முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1386
ஞானம் மேம்பட அருளும் சேலம் புக்கம்பட்டி விலாரிமலை முருகன் கோவில்
25.03.2025 செவ்வாய்
அருள்மிகு விலாரிமலை முருகன் திருக்கோவில்
புக்கம்பட்டி 636451
ஓமலூர் வட்டம்
சேலம் மாவட்டம்
இருப்பிடம்: சேலம் புதிய பேருந்து நிலையம் 28 கிமீ, மேச்சேரி 8 கிமீ, ஓமலூர் 15 கிமீ, தாரமங்கலம் 18 கிமீ, மேட்டூர் 29 கிமீ
மூலவர்: முருகன்
உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
சேலம் மாவட்டம் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவில் இருக்கும் புக்கம்பட்டி கிராமத்தில் ஞானம் மேம்பட அருளும் புக்கம்பட்டி விலாரிமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் மேச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது ஓமலூர் பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது தாரமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவு அல்லது மேட்டூர் பேருந்து நிலையத்திலிருந்து 29 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் புக்கம்பட்டி விலாரிமலை முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் முருகன் அருளாட்சி செய்கின்றார். இக்கோவிலுக்கு அருகில் தான்தோன்றிய தாமோதர் பெருமாள் கோவில் மற்றும் மகாலட்சுமி கோவில் இருப்பது கூடுதல் சிறப்பம்சம். இக்கோவிலின் கும்பாபிஷேம் 2022-ல் நடைபெற்றது.
சேலம் புக்கம்பட்டி விலாரிமலை முருகன் கோவிலில் தைப்பூசம் வெகுச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் பங்குனி உத்திரம் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் திருவிழாக்களும் சிறப்பு பூஜைகளுடன் நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
சேலம் புக்கம்பட்டி விலாரிமலை முருகன் கோவில் இப்பகுதியில் பிரசித்திப் பெற்றக் கோவிலாகும். இத்திருக்கோவிலின் கும்பாபிஷேகம் 2022-ல் சிறப்பாக நடைபெற்றது.
தல அமைப்பு:
சேலம் புக்கம்பட்டி விலாரிமலை முருகன் திருக்கோவில் கருவறையில் மூலவர் முருகன் கையில் வேலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில் மற்றும் பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், இடும்பன், உற்சவமூர்த்திகள் உள்ளிட்ட தெய்வங்கள் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
ஞானம் மேம்பட, அச்சம் தவிர்க்க, மனத்தெளிவு பிறக்க, விரும்பியது கிடைக்க, வினைகள் நீங்க, பிணிகள் அகல, குழந்தைப்பேறு வேண்டி, உடல் ஆரோக்கியம் உண்டாக, விவசாயம் செழிக்க, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
அச்சம் தவிர்க்க அருளும் சேலம் புக்கம்பட்டி விலாரிமலை முருகனை மனமுருகி பிரார்த்திப்போம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1386 ஞானம் மேம்பட அருளும் சேலம் புக்கம்பட்டி விலாரிமலை முருகன்
படம் 2 - 1386 அச்சம் தவிர்க்க அருளும் சேலம் புக்கம்பட்டி விலாரிமலை முருகன்
Comments
Post a Comment