கோவில் 1385 - சேலம் அயோத்தியாபட்டிணம் கந்தசாமி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1385

அல்லல்கள் அகற்றிடும் சேலம் அயோத்தியாபட்டிணம் கந்தசாமி கோவில்

24.03.2025 திங்கள்


அருள்மிகு கந்தசாமி திருக்கோவில்

அயோத்தியாபட்டிணம் 636103

வாழப்படி வட்டம்

சேலம் மாவட்டம்


இருப்பிடம்: சேலம் புதிய பேருந்து நிலையம் 12 கிமீ, சேலம் பழைய பேருந்து நிலையம் 11 கிமீ, அம்மாபேட்டை 6 கிமீ, சேலம் கந்தாஸ்ரமம் முருகன் கோவில் 6 கிமீ, வாழப்பாடி 20 கிமீ


மூலவர்: கந்தசாமி


தல மகிமை:

சேலம் மாவட்டம் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவில் இருக்கும் அயோத்தியாபட்டிணம் நகரில் அல்லல்கள் அகற்றிடும் சேலம் அயோத்தியாபட்டிணம் கந்தசாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 11 கிமீ தொலைவு அல்லது அம்மாபேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது பிரசித்திப் பெற்ற சேலம் கந்தாஸ்ரமம் முருகன் கோவிலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது வாழப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் அயோத்தியாபட்டிணம் கந்தசாமி கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவர் கந்தசாமி பெருங்கருணையுடன் அருள்கின்றார். இக்கோவிலுக்கு அருகில் மிகவும் சிறப்பு மிக்க அயோத்தியாபட்டிணம் கோதண்டராமர் கோவில் உள்ளது.


சேலம் அயோத்தியாபட்டிணம் கந்தசாமி கோவிலில் தைப்பூசம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் முதலான திருவிழாக்கள் இக்கோவிலின் முக்கிய திருவிழாக்காளாக கொண்டாடப்படுகின்றன. மேலும் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், மற்றும் ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் திருவிழாக்களும் விமரிசையாக நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.


தல வரலாறு:

ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் அயோத்தியில் நடைபெறுவதற்கு முன்பு விபீஷணனுக்கு ராமர் பட்டாபிஷேகக் திருக்கோலத்தில் காட்சி தந்த இடம் அயோத்தியாபட்டிணம் கோதண்டராமர் கோவில் ஆகும். இக்கோவிலுக்கு வடக்கே கந்தசாமி கோவில் அமைந்துள்ளது.


தல அமைப்பு:

அயோத்தியாபட்டிணம் கந்தசாமி கோவில் மூன்று நிலை கோபுர நுழைவாயிலைக் கொண்டுள்ளது. இக்கோவில் கோபுரத்தில் முருகப்பெருமானின் திருவடிவங்கள் சுதை சிற்பங்களாக உள்ளன. திருக்கோவில் கருவறையில் மூலவர் கந்தசாமி கருணை வடிவாக திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில் மற்றும் பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், இடும்பன், நவக்கிரக்கங்கள் முதலான தெய்வங்களும் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

அல்லல்கள் அகல, வாழ்வில் திருப்பங்கள் பெற, நினைத்தது நடைபெற, சந்தான செல்வம் வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, நல்லன நடக்க, சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட, பிணிகள் நீங்க, வினைகள் விலக


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


வாழ்வில் திருப்பங்கள் தந்தருளும் சேலம் அயோத்தியாபட்டிணம் கந்தசாமி போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1385 அல்லல்கள் அகற்றிடும் சேலம் அயோத்தியாபட்டிணம் கந்தசாமி


படம் 2 - 1385 வாழ்வில் திருப்பங்கள் தந்தருளும் சேலம் அயோத்தியாபட்டிணம் கந்தசாமி






Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்