கோவில் 1384 - சேலம் சன்னியாசிகுண்டு கதிர்காம முருகன் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1384

நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் சேலம் சன்னியாசிகுண்டு கதிர்காம முருகன் கோவில்

23.03.2025 ஞாயிறு


அருள்மிகு கதிர்காம முருகன் திருக்கோவில்

சன்னியாசிகுண்டு

சேலம் 636015

சேலம் வட்டம்

சேலம் மாவட்டம்


இருப்பிடம்: சேலம் புதிய பேருந்து நிலையம் 13 கிமீ, சேலம் பழைய பேருந்து நிலையம் 8 கிமீ, அம்மாபேட்டை 6 கிமீ, சேலம் கந்தாஸ்ரமம் முருகன் கோவில் 11 கிமீ


மூலவர்: முருகன்


தல மகிமை:

சேலம் மாநகரம் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவில் இருக்கும் சன்னியாசிகுண்டு பகுதியில் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் சேலம் சன்னியாசிகுண்டு கதிர்காம முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது அம்மாபேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது சிறப்புப் பெற்ற சேலம் கந்தாஸ்ரமம் முருகன் கோவிலிருந்து 11 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சேலம் சன்னியாசிகுண்டு கதிர்காம முருகன் முருகன் கோவிலை அடையலாம். இக்கோவிலில் கதிர்காம முருகன் மூலவராக கருணையுடன் அருள்புரிகின்றார்.


சேலம் கதிர்காம முருகன் முருகன் கோவிலில் தைப்பூசம் ஒவ்வொரு வருடமும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை மற்றும் ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் திருவிழாக்கள் சிறப்பு பூஜைகளுடன் நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை நாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.


தல வரலாறு:

சேலம் மாநகரில் கடப்பட்டுள்ள கதிர்காம முருகன் கோவில் கட்டப்பட்டது மிகவும் பிரசித்திப் பெற்றது.


தல அமைப்பு:

சேலம் கதிர்காம முருகன் கோவில் கருவறையில் மொல்லவர் கதிர்காம முருகன் கயில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், சிவபெருமான், அம்மன் உள்ளிட்ட அனைத்து பரிவார மூர்த்திகளும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, தொழில் மேம்பட, விரும்பியது கிடைக்க, வினைகள் நீங்க, பிணிகள் அகல, குடும்ப ஒற்றுமை ஓங்க, விவசாயம் செழிக்க, வியாபாரம் விருத்தியடைய, நல்லன நடைபெற, மனப்பயம் போக்க, நோய்கள் சீராக


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


தொழில் மேம்பட அருளும் சேலம் சன்னியாசிகுண்டு கதிர்காம முருகனை மனக்கண்ணால் தரிசித்து போற்றுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1384 நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் சேலம் சன்னியாசிகுண்டு கதிர்காம முருகன்


படம் 2 - 1384 தொழில் மேம்பட அருளும் சேலம் சன்னியாசிகுண்டு கதிர்காம முருகன்

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்