கோவில் 1381 - சேலம் ஊத்து கோவில் முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1381
மன மகிழ்ச்சி தரும் சேலம் ஊத்து கோவில் முருகன் கோவில்
20.03.2025 வியாழன்
அருள்மிகு முருகன் திருக்கோவில்
ஊத்து கோவில் 636106
வாழப்பாடி வட்டம்
சேலம் மாவட்டம்
இருப்பிடம்: சேலம் புதிய பேருந்து நிலையம் 24 கிமீ, சேலம் பழைய பேருந்து நிலையம் 21 கிமீ, வாழப்பாடி 9 கிமீ, ஏத்தாப்பூர் முருகன் கோவில் 20 கிமீ, பெத்தநாயக்கன்பாளையம் 26 கிமீ, ஆத்தூர் 35 கிமீ, காரிப்பட்டி சுப்பிரமணியர் கோவில் 6 கிமீ, மின்னாம்பள்ளி முருகன் கோவில் 8 கிமீ
மூலவர்: முருகன்
தல மகிமை:
சேலம் மாவட்டம் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 24 கிமீ தொலைவில் இருக்கும் ஊத்து கோவில் கிராமத்தில் மன மகிழ்ச்சி தரும் சேலம் ஊத்து கோவில் முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவு அல்லது வாழப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து 9 கிமீ தொலைவு அல்லது சிறப்பு மிக்க 140 அடி ஏத்தாப்பூர் முருகன் கோவிலிருந்து 20 கிமீ தொலைவு அல்லது பெத்தநாயக்கன்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 26 கிமீ தொலைவு அல்லது ஆத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து 35 கிமீ தொலைவு அல்லது அருகில் இருக்கும் காரிப்பட்டி சுப்பிரமணியர் கோவிலிலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது அருகில் இருக்கும் மின்னாம்பள்ளி முருகன் கோவிலிலிருந்து 8 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் ஊத்து கோவில் முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் முருகப்பெருமான் மூலவராக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.
சேலம் ஊத்து கோவில் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம், பங்குனி உத்திரம் திருவிழாக்கள் முதன்மை விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன. மேலும் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை மற்றும் ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
சேலம் ஊத்து கோவில் முருகன் கோவில் வாழப்பாடி வட்டத்தில் மிகவும் பழமையான கோவிலாகக் கருதப்படுகிறது.
தல அமைப்பு:
சேலம் ஊத்து கோவில் முருகன் கோவில் கருவறையில் முருகப்பெருமான் கையில் வேலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு ஆற்றலுடன் அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயகர், நாகர்கள் உள்ளிட்ட தெய்வங்களும் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
மன மகிழ்ச்சி அடைய, நினைத்தது நிறைவேற, வினைகள் விலக, பிணிகள் அகல, சந்தான பாக்கியம் வேண்டி, சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட, நோய்கள் அனைத்தும் குணமாக, நல்லன அருள, கல்வி மேம்பட, விவசாயம் செழிக்க, தோஷங்கள் நீங்க
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
நினைத்ததை எல்லாம் நிறைவேற்றும் சேலம் ஊத்து கோவில் முருகன் திருவடிகள் பணிந்து தொழுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1381 மன மகிழ்ச்சி தரும் சேலம் ஊத்து கோவில் முருகன்
Comments
Post a Comment