கோவில் 1380 - சேலம் மின்னாம்பள்ளி முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1380
வேண்டியதைத் தந்தருளும் சேலம் மின்னாம்பள்ளி முருகன் கோவில்
19.03.2025 புதன்
அருள்மிகு முருகன் திருக்கோவில்
மின்னாம்பள்ளி 636106
வாழப்பாடி வட்டம்
சேலம் மாவட்டம்
இருப்பிடம்: சேலம் புதிய பேருந்து நிலையம் 18 கிமீ, சேலம் பழைய பேருந்து நிலையம் 16 கிமீ, வாழப்பாடி 16 கிமீ, ஏத்தாப்பூர் முருகன் கோவில் 26 கிமீ, பெத்தநாயக்கன்பாளையம் 33 கிமீ, ஆத்தூர் 44 கிமீ, காரிப்பட்டி சுப்பிரமணியர் கோவில் 5 கிமீ
மூலவர்: முருகன்
தல மகிமை:
சேலம் மாவட்டம் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவில் இருக்கும் மின்னாம்பள்ளி கிராமத்தில் வேண்டியதைத் தந்தருளும் மின்னாம்பள்ளி முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 16 கிமீ தொலைவு அல்லது வாழப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து 16 கிமீ தொலைவு அல்லது புகழ் பெற்ற 140 அடி ஏத்தாப்பூர் முருகன் கோவிலிருந்து 26 கிமீ தொலைவு அல்லது பெத்தநாயக்கன்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 33 கிமீ தொலைவு அல்லது ஆத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து 44 கிமீ தொலைவு அல்லது அருகில் இருக்கும் காரிப்பட்டி சுப்பிரமணியர் கோவிலிலிருந்து 5 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் மின்னாம்பள்ளி முருகன் கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவர் முருகன் அருள்புரிகின்றார்.
சேலம் மின்னாம்பள்ளி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை மற்றும் ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் திருவிழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
சேலம் மின்னாம்பள்ளி முருகன் கோவில் வாழப்பாடி வட்டத்தில் உள்ளூர் புரவலர்கள் மற்றும் பக்தர்கள் உதவியுடம் கட்டப்பட்டது.
தல அமைப்பு:
சேலம் மின்னாம்பள்ளி முருகன் கோவில் கருவறையில் மூலவர் முருகன் கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சியருளி பக்தர்களுக்கு ஆற்றலுடன் அருள்பாலிக்கின்றார். இக்கோவில் மூலவர் சிறிய மூர்த்தமாக இருந்தாலும், முருகப்பெருமான் கீர்த்தி பெரியது. கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர் முதலான தெய்வங்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
வேண்டியது கிடைக்க, யோகங்கள் பெற்றிட, கேட்டது கிடைத்திட, பிணிகள் நீங்க, திருமணத்தடை அகல, குழந்தைப்பேறு வேண்டி, சகல நோய்களும் நீங்கிட, குடும்ப வாழ்வு சிறக்க, மன அமைதி வேண்டி, சிக்கல்கள் தீர, நேர்மறை அதிர்வுகள் உண்டாக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
யோகங்கள் அருளும் சேலம் மின்னாம்பள்ளி முருகன் மனக்கண்ணால் தரிசித்து பலன் பெற்றிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1380 வேண்டியதைத் தந்தருளும் சேலம் மின்னாம்பள்ளி முருகன்
படம் 2 - 1380 யோகங்கள் அருளும் சேலம் மின்னாம்பள்ளி முருகன் கோவில்
Comments
Post a Comment