கோவில் 1379 - சேலம் காரிப்பட்டி சுப்பிரமணியர் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1379
கல்வி சிறக்க அருளும் சேலம் காரிப்பட்டி சுப்பிரமணியர் கோவில்
18.03.2025 செவ்வாய்
அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோவில்
காரிப்பட்டி 636106
வாழப்பாடி வட்டம்
சேலம் மாவட்டம்
இருப்பிடம்: சேலம் புதிய பேருந்து நிலையம் 18 கிமீ, சேலம் பழைய பேருந்து நிலையம் 15 கிமீ, வாழப்பாடி 15 கிமீ, ஏத்தாப்பூர் முருகன் கோவில் 26 கிமீ, பெத்தநாயக்கன்பாளையம் 32 கிமீ, ஆத்தூர் 43 கிமீ
மூலவர்: சுப்பிரமணியர்
உற்சவர்: சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
சேலம் மாவட்டம் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவில் இருக்கும் காரிப்பட்டி கிராமத்தில் சங்கடங்கள் தீர்க்கும் காரிப்பட்டி சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. மேலும் சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது வாழப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது சிறப்பு மிக்க 140 அடி ஏத்தாப்பூர் முருகன் கோவிலிருந்து 26 கிமீ தொலைவு அல்லது பெத்தநாயக்கன்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 32 கிமீ தொலைவு அல்லது ஆத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து 43 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் காரிப்பட்டி சுப்பிரமணியர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் சுப்பிரமணியர் மூலவர் வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றார்.
சேலம் காரிப்பட்டி சுப்பிரமணியர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை மற்றும் ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் திருவிழாக்கள் அனைத்தும் சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை தினங்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
சேலம் காரிப்பட்டி சுப்பிரமணியர் கோவில் வாழப்பாடி வட்டத்தில் பிரசித்திப் பெற்றக் கோவிலாகும்.
தல அமைப்பு:
சேலம் காரிப்பட்டி சுப்பிரமணியர் கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணியர் கையில் தண்டம் ஏந்தி பக்தர்களுக்கு ஆற்றலுடன் அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இக்கோவிலில் விநாயகர், உற்சவ மூர்த்திகள் உள்ளிட்ட தெய்வங்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
கல்வி சிறக்க, சங்கடங்கள் தீர, விரும்பியது கிடைக்க, குழந்தை வேண்டி, பிணிகள் நீங்க, உடல் நலன் வேண்டி, விவசாயம் செழிக்க, வியாபாரம், தொழில் மேம்பட, மன மகிழ்ச்சி கிடைக்க, தோஷங்கள் விலக, நேர்மறை எண்ணங்கள் உண்டாக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
சங்கடங்கள் தீர்க்கும் சேலம் காரிப்பட்டி சுப்பிரமணியரை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1379 கல்வி சிறக்க அருளும் சேலம் காரிப்பட்டி சுப்பிரமணியர்
படம் 2 - 1379 சங்கடங்கள் தீர்க்கும் சேலம் காரிப்பட்டி சுப்பிரமணியர்
Comments
Post a Comment