கோவில் 1361 - சேலம் மாசிநாயக்கன்பட்டி பாலமுருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1361
ஆற்றல்களை அள்ளித் தரும் சேலம் மாசிநாயக்கன்பட்டி பாலமுருகன் கோவில்
28.02.2025 வெள்ளி
அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில்
மாசிநாயக்கன்பட்டி 636103
வாழப்பாடி வட்டம்
சேலம் மாவட்டம்
இருப்பிடம்: சேலம் புதிய பேருந்து நிலையம் 15 கிமீ, வாழப்பாடி 19 கிமீ, ஏத்தாப்பூர் முருகன் கோவில் 30 கிமீ, பெத்தநாயக்கன்பாளையம் 36 கிமீ, ஆத்தூர் 47 கிமீ
மூலவர்: பாலமுருகன்
தல மகிமை:
சேலம் மாவட்டம் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ள மாசிநாயக்கன்பட்டி கிராமத்தில் ஆற்றல்களை அள்ளித் தரும் மாசிநாயக்கன்பட்டி பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் வாழப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து 19 கிமீ தொலைவு அல்லது ஏத்தாப்பூர் முருகன் கோவிலிலிருந்து 30 கிமீ தொலைவு அல்லது பெத்தநாயக்கன்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 36 கிமீ தொலைவு அல்லது ஆத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து 47 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் மாசிநாயக்கன்பட்டி பாலமுருகன் கோவிலை அடையலாம். மூலவர் பாலமுருகன் இக்கோவிலில் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கின்றார்.
மாசிநாயக்கன்பட்டி பாலமுருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பு பூஜைகளுடன் கொண்டாப்படுகின்றன.
தல வரலாறு:
சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் மாசிநாயக்கன்பட்டி பாலமுருகன் கோவில் இப்பகுதியில் மிகவும் பழமையான கோவிலாக கருதப்படுகிறது.
தல அமைப்பு:
மாசிநாயக்கன்பட்டி பாலமுருகன் கோவில் கருவறையில் மூலவர் பாலமுருகன் அழகு பாலகனாக வீற்றிருந்து பக்தர்களக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகப்பெருமான் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கார்த்திகை
பிரார்த்தனை:
ஆற்றல்களை அள்ளித் தர, வேண்டிய வரங்கள் கிட்ட, இரு வினைகள் தீர, பிணிகள் நீங்க, குழந்தை வேண்டி, கல்வி சிறக்க, வியாபாரம், விவசாயம் மேம்பட, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
வேண்டிய வரங்களை தந்தருளும் சேலம் மாசிநாயக்கன்பட்டி பாலமுருகனை போற்றித் தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1361 ஆற்றல்களை அள்ளித் தரும் சேலம் மாசிநாயக்கன்பட்டி பாலமுருகன்
Comments
Post a Comment