கோவில் 1359 - சேலம் கொட்டவாடி பாலசுப்பிரமணியர் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1359
பாவங்களை போக்கும் சேலம் கொட்டவாடி பாலசுப்பிரமணியர் கோவில்
26.02.2025 புதன்
அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவில்
கொட்டவாடி 636115
ஆத்தூர் வட்டம்
சேலம் மாவட்டம்
இருப்பிடம்: சேலம் புதிய பேருந்து நிலையம் 38 கிமீ, வாழப்பாடி 5 கிமீ, ஏத்தாப்பூர் முருகன் கோவில் 10 கிமீ, பெத்தநாயக்கன்பாளையம் 17 கிமீ, ஆத்தூர் 26 கிமீ
மூலவர்: வேல்முருகன்
தல மகிமை:
சேலம் மாவட்டம் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 38 கிமீ தொலைவில் உள்ள கொட்டவாடி கிராமத்தில் பாவங்களை போக்கும் சேலம் கொட்டவாடி பாலசுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. மேலும் வாழப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவு அல்லது மிகவும் சிறப்புப் பெற்ற 140 அடி உயர ஏத்தாப்பூர் முருகன் கோவிலிலிருந்து 10 கிமீ தொலைவு அல்லது பெத்தநாயக்கன்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 17 கிமீ தொலைவு அல்லது ஆத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து 26 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் கொட்டவாடி பாலசுப்பிரமணியர் கோவிலை அடையலாம். பாலசுப்பிரமணியர் இக்கோவிலில் மூலவராக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். பிரசித்திப் பெற்ற கொட்டவாடி கந்தசாமி திருக்கோவில் இத்தலத்தில் இருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.
கொட்டவாடி பாலசுப்பிரமணியர் கோவிலில் நடைபெறும் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் வெகு விமரிசையாகக் கொண்டாப்படுகின்றன. சஷ்டி, கார்த்திகை நன்னாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன,
தல வரலாறு:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் கொட்டவாடி பாலசுப்பிரமணியர் கோவில் இப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.
தல அமைப்
கொட்டவாடி பாலசுப்பிரமணியர் திருக்கோவில் கருவறையில் பாலசுப்பிரமணியர் அழகிய பாலகனாக நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு ஆற்றலுடன் அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிப்பீடம் உள்ளன. மேலும் விநாயகர் உள்ளிட்ட தெய்வங்கள் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கார்த்திகை
பிரார்த்தனை:
பாவங்களை போக்க, எண்ணியது ஈடேற, இருவினைகள் நீங்க, பிணிகள் அகல, சந்தான பாக்கியம் கிட்ட, குடும்ப ஒற்றுமை ஓங்க, நோய்கள் குணமாக, சிக்கல்கள் தீர, வாழ்வில் ஏற்றங்கள் பெற
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
எண்ணியது யாவும் ஈடேற அருளும் சேலம் கொட்டவாடி பாலசுப்பிரமணியரை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1359 பாவங்களை போக்கும் சேலம் கொட்டவாடி பாலசுப்பிரமணியர்
படம் 2 - 1359 எண்ணியது யாவும் ஈடேற அருளும் சேலம் கொட்டவாடி பாலசுப்பிரமணியர்
Comments
Post a Comment