கோவில் 1356 - சேலம் காவேரிப்பட்டி வேல்முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1356
கேட்டதை தரும் சேலம் காவேரிப்பட்டி வேல்முருகன் கோவில்
23.02.2025 ஞாயிறு
அருள்மிகு வேல்முருகன் திருக்கோவில்
காவேரிப்பட்டி அக்ரஹாரம்
காவேரிப்பட்டி 636115
சங்ககிரி வட்டம்
சேலம் மாவட்டம்
இருப்பிடம்: சேலம் புதிய பேருந்து நிலையம் 59 கிமீ, எடப்பாடி 14 கிமீ, குமாராபாளையம் 15 கிமீ, சங்ககிரி 23 கிமீ, ஈரோடு 29 கிமீ
மூலவர்: வேல்முருகன்
தல மகிமை:
சேலம் மாவட்டம் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 59 கிமீ தொலைவில் உள்ள காவேரிப்பட்டி கிராமத்தில் கேட்டதை தரும் காவேரிப்பட்டி வேல்முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் எடப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவு அல்லது குமாராபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது சங்ககிரி பேருந்து நிலையத்திலிருந்து 23 கிமீ தொலைவு அல்லது ஈரோடு மாநகரம் பேருந்து நிலையத்திலிருந்து 29 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் காவேரிப்பட்டி வேல்முருகன் கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவர் வேல்முருகன் கையில் வேலேந்தி மிகவும் ஆற்றலுடன் அருள்புரிகின்றார்.
காவேரிப்பட்டி வேல்முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகின்றது. மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாப்படுகின்றன.
தல வரலாறு:
காவேரிப்பட்டி வேல்முருகன் கோவில் பழமையான கோவிலாக கருதப்படுகின்றது.
தல அமைப்பு:
காவேரிப்பட்டி வேல்முருகன் கோவில் கருவறையில் வேல்முருகன் மூலவராக கையில் வேலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு கருணை பொங்க அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரே மயில், பலிபீடம் உள்ளன. உற்சவர் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் பொலிவுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர் உட்பட பரிவார தெய்வங்களும் அனைத்து இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கார்த்திகை
பிரார்த்தனை:
கேட்டது கிடைக்க, தொல்லைகள் அகல, வினைகள் தீர, பிணிகள் போக்க, குழந்தை பாக்கியம் உண்டாக, சஞ்சலங்கள் விலக, மன அமைதி கிட்ட, நோய்கள் நீங்க, விவசாயம் விருத்தியடைய், வியாபாரம் வெற்றி பெற, தோஷங்கள் விலகிட
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
தொல்லைகளை அகற்றியருளும் சேலம் காவேரிப்பட்டி வேல்முருகனை வேண்டிக் கொள்வோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1356 கேட்டதை தரும் சேலம் காவேரிப்பட்டி வேல்முருகன்
Comments
Post a Comment