கோவில் 1362 - கோயம்புத்தூர் தெக்குப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1362 நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் கோயம்புத்தூர் தெக்குப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவில் 01.03.2025 சனி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [அ/மி முருகன் திருக்கோவில்] காந்தி நகர் தெக்குப்பாளையம் 641020 [தெற்குப்பாளையம்] கோயம்புத்தூர் வடக்கு வட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் இருப்பிடம்: கோயம்புத்தூர் 14 கிமீ, துடியலூர் 7 கிமீ, காரமடை 14 கிமீ, மேட்டுப்பாளையம் 22 கிமீ, அன்னூர் 26 கிமீ மூலவர்: சுப்பிரமணிய சுவாமி உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி தல மகிமை: கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவில் உள்ள தெக்குப்பாளையம் பகுதியில் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் தெக்குப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் துடியலூர் பேருந்து நிலையத்திலிருந்து 7 கிமீ தொலைவு அல்லது காரமடை பேருந்து நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவு அல்லது மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந...