கோவில் 1358 - சேலம் பேளூர் வெள்ளிமலை வேல்முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1358
வாழ்வில் வெற்றிகளை தரும் சேலம் பேளூர் வெள்ளிமலை வேல்முருகன் கோவில்
25.02.2025 செவ்வாய்
அருள்மிகு வெள்ளிமலை வேல்முருகன் திருக்கோவில்
வெள்ளிமலை
பேளூர் 636104
வாழப்பாடி வட்டம்
சேலம் மாவட்டம்
இருப்பிடம்: சேலம் புதிய பேருந்து நிலையம் 40 கிமீ, வாழப்பாடி 9 கிமீ, ஏத்தாப்பூர் முருகன் கோவில் 17 கிமீ, பெத்தநாயக்கன்பாளையம் 23 கிமீ, ஆத்தூர் 34 கிமீ
மூலவர்: வேல்முருகன்
தல மகிமை:
சேலம் மாவட்டம் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள பேளூர் கிராமத்தில் இருக்கும் வெள்ளிமலையில் வாழ்வில் வெற்றிகளை தரும் பேளூர் வெள்ளிமலை வேல்முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் வாழப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து 9 கிமீ தொலைவு அல்லது பிரசித்திப் பெற்ற 140 அடி உயர ஏத்தாப்பூர் முருகன் கோவிலிலிருந்து 17 கிமீ தொலைவு அல்லது பெத்தநாயக்கன்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 23 கிமீ தொலைவு அல்லது ஆத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து 34 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் பேளூர் வெள்ளிமலை வேல்முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் வேல்முருகன் அருளாட்சி புரிகின்றார்.
பேளூர் வெள்ளிமலை வேல்முருகன் கோவிலில் நடைபெறும் தைப்பூசம் மிகவும் பிரசித்திப் பெற்ற திருவிழாவகும். மேலும் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பு பூஜைகளுடன் கொண்டாப்படுகின்றன.
தல வரலாறு:
சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் பேளூரில் உள்ள வெள்ளிமலை வேல்முருகன் திருக்கோவில் மிகவும் பழமையான் கோவிலாகக் கருதப்படுகின்றது..
தல அமைப்
பேளூர் வெள்ளிமலை வேல்முருகன் திருக்கோவில் கருவறைக்கு எதிரில் வேல், மயில், பலிப்பீடம் உள்ளன. கருவறையில் வேல்முருகன் சிறு பாலகனாக மயில் பின் நிற்க வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மூலவர் வேல்முருகன் தனது இடது திருக்கரத்தை இடுப்பில் வைத்தும், வலது திருக்கரம் அபய முத்திரை காண்பித்தும் திருக்காட்சியருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர் மற்றும் பிற தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கார்த்திகை
பிரார்த்தனை:
வாழ்வில் வெற்றி பெற, தீவினைகள் அகல, பிணிகள் தீர, குழந்தைப்பேறு வேண்டி, குடும்ப வாழ்க்கை சிறக்க, வேண்டியது கிடைக்க, நல்லன அருள, உடல் நலன் சீராக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
தீவினைகளை அகற்றியருளும் சேலம் பேளூர் வெள்ளிமலை வேல்முருகனை மனமுருகி வேண்டிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1358 வாழ்வில் வெற்றிகளை தரும் சேலம் பேளூர் வெள்ளிமலை வேல்முருகன்
படம் 2 - 1358 வினைகளை அகற்றியருளும் சேலம் பேளூர் வெள்ளிமலை வேல்முருகன்
Comments
Post a Comment