கோவில் 1302 - மதுரை தென்னமநல்லூர் முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1302
சஞ்சலங்களை தீர்க்கும் மதுரை தென்னமநல்லூர் முருகன் கோவில்
31.12.24 செவ்வாய்
அருள்மிகு முருகன் திருக்கோவில்
தென்னமநல்லூர் 625707
கள்ளிக்குடி வட்டம்
விருதுநகர் மாவட்டம்
இருப்பிடம்: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் 53 கிமீ, கள்ளிக்குடி 13 கிமீ, விருதுநகர் 13 கிமீ, திருமங்கலம் 19 கிமீ
மூலவர்: முருகன்
தல மகிமை:
மதுரை மாவட்டம் : மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து 53 கிமீ தொலைவில் கள்ளிக்குடி வட்டத்தில் இருக்கும் தென்னமநல்லூர் கிராமத்தில் சஞ்சலங்களை தீர்க்கும் தென்னமநல்லூர் முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் கள்ளிக்குடி நகரிலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது விருதுநகர் நகரிலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது திருமங்கலம் நகரிலிருந்து 19 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் மதுரை மாவட்டம் தென்னமநல்லூர் முருகன் கோவிலை அடையலாம். இக்கோவிலில் முருகன் மூலவராக அருள்கின்றார்.
தென்னமநல்லூர் முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம் உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கார்த்திகை தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
தென்னமநல்லூர் கிராமத்தில் புரவலர்கள் மற்றும் முருக பக்தர்கள் பேருதவியுடன் முருகன் கோவில் கட்டப்பட்டது. கடந்த வருடம் கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் சிறந்த நடந்தேறியது.
தல அமைப்பு:
சிறிய மலைக்குன்றின் மீது அமைந்துள்ள சிறிய முருகன் கோவில் கருவறையில் மூலவர் முருகன் மயில் பின் நிற்க நின்ற திருக்கோலத்தில் கையில் வேலுடன் சிறிய மூர்த்தமாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், சிவபெருமான் உள்ளிட்ட தெய்வங்களும் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், சஷ்டி, கார்த்திகை
பிரார்த்தனை:
சஞ்சலங்கள் தீர, கேட்டது கிடைக்க, வினைகள் தீர, பிணிகள் நீங்க, ஐஸ்வர்யம் பெருக, மன மகிழ்ச்சி கிட்ட, குடும்ப வாழ்வு சிறக்க, உடல் ஆரோக்கியம் வேண்டி, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
கேட்டது எல்லாம் தந்தருளும் மதுரை தென்னமநல்லூர் முருகன் திருவடிகள் பணிந்து வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
Comments
Post a Comment